Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வேண்டும் வரமருளும் திருத்தளி நாதர் கோவில்

Go down

வேண்டும் வரமருளும் திருத்தளி நாதர் கோவில் Empty வேண்டும் வரமருளும் திருத்தளி நாதர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:20 pm

ஸ்தல வரலாறு:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது இக்கோவில். எங்கும் நீக்கமற இருக்கும் சிவபெருமான் தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அப்படிப்பட்ட ஸ்தலங்களில் ஒன்றுதான் இந்த கோவில். ஈசனாகிய சிவபெருமான் இங்கு எழுந்தருளக்காரணம் மஹாலட்சுமி ஆவார். சிவபெருமான் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான்.

அவற்றில் ஒன்றுதான் கெளரி தாண்டவம். இறைவன் கெளரி தாண்டவம் ஆடுவதை காண விரும்பிய மஹாலட்சுமி தேவி இந்த இடத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்து கெளரி தாண்டவம் ஆடும் காட்சியை காணப்பெற்றார். மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதால், இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.

பைரவர் சன்னதி:

இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவர் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார்.

குழந்தை வடிவில், வலது கரத்தில் பழம், இடது கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு.

ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் "யோக பைரவர்" என்று அழைக்கப்படுகின்றார். இவரை வணங்கினால், திருமணம், வேலையின்மை பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளும் தீர வழிகாட்டுகிறார் என்பது நம்பிக்கை. இந்திரனின் மகன் இத்தலத்தில் உள்ள பைரவரை வணங்கி நன்மை அடையப்பெற்றான் என்பது வரலாறு.

இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து பக்தியுடன் வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்சனைகள் நீங்குவதாக மக்களின் நம்பிக்கை.

அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், உதவியாளர் நைவேத்தியம் கொண்டுசெல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.

செல்லும் வழி: சென்னையில் இருந்தோ அல்லது மற்ற ஊர்களில் இருந்து செல்பவர்கள் மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி, தேவகோட்டை செல்லும் பேருந்தில் சென்றால் திருப்பத்தூர் நகரத்தில் அனைத்து வண்டிகளும் நின்று செல்லும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum