Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கும் கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில்

Go down

பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கும் கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் Empty பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கும் கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:18 pm

கரூர் மாவட்டம் அய்யர்மலை பகுதியில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் என்று அழைக்கின்றனர். குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம்.

ஸ்தல வரலாறு :

மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது அன்பு கொண்டவர்.வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத சுந்தராம்பிகை திருப்பதி வெங்கடாசலபதியிடம், தனக்கு குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக பிரார்த்தித்துக் கொண்டாள்.

வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சுந்தராம்பிகை குழந்தைக்காக வெங்கடா சலபதியிடம் வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது.குழந்தைக்கு "குண்டலாச்சாரி' என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை.

டங்கணாச்சாரி வெகுண்டார்.""இந்த உலகில் சிவனைத் தவிர சக்தியுள்ள கடவுள் வேறு யாருமில்லை. எனக்கு சிவன் அருளால் தான் குழந்தை பிறந்தது. நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,'' எனக்கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள்.தவமிருந்து பெற்ற மகனுக்கு, வேண்டுதலை நிறைவேற் றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக்கலங்கினாள்.

இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அவனுக்கு புரியும்படியாக அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள்." இதற்காகவா கவலைப் படுகிறாய்.நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,'' என்றான்.

அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,'' என்று அழுதான்.

அப்போது ஒரு துறவி அங்கு வந்தார்.அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். காரணத்தை தெரிந்து கொண்டு, "இதற்காகவா அழுகிறாய்,'' என்றவர் நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதியை எழுந்தருளச் செய்வோம். நீ உன்னால் முடிந்த சிறுகற்களை எடுத்து வா.

நான் பெரிய கற்களை தூக்கி வந்து கோயிலை கட்டி முடிப்போம்,'' என்றார்.சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது. மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்கு போய் விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான்.

காணவில்லை. இந்தத் தகவல் அரசனுக்கு போயிற்று. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். "சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,'' என்றவர் ஆவேசத்துடன் வந்து ஆத்திரம் கண்ணை மறைக்க கோயிலில் நின்ற தன் மகனையே அவசரத்தில் வெட்டிச் சாய்த்தார்.

இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார்.சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து தட்டுத்தடுமாறி ஓடி வந்தாள். அப்போது வெங்கடேசப் பெருமான் அங்கு தோன்றி, சிறுவனை உயிர்ப்பித்தார். இனி இந்த தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன் என்றார்.இப்போது இக்கோயில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.

சிறப்புகள் :

இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன. இத்தலத்து ரத்தினகிரீஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள். தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும்போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன.

இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி, ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறி விட்டு வந்தாலே நோய்கள் குணமாகிறது.

கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum