Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அகிலாண்டபுரம் காளியம்மன் கோவில்

Go down

அகிலாண்டபுரம் காளியம்மன் கோவில் Empty அகிலாண்டபுரம் காளியம்மன் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:17 pm

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் காளியம்மன் பக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் ஆற்றல் படைத்தவளாக உள்ளாள். காளியம்மன் கோவிலுக்கு வடக்கு வாசல், மேற்கு வாசல் என பிரமாண்டமான இரண்டு தோரண வாசல்கள் உள்ளன.

காளியம்மன் :

ஆலயத்தில் உள்ளே காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். வடக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்ததும், இடது பக்கம் பரிவார தேவதைகளான, காத்தவராயன், காலபைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். வலது பக்கத்தில் கருப்பசாமி கம்பீரமாக நிற்கிறார்.

இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால், அம்மனுக்கு உகந்த வாகனமாக சிம்மம் உள்ளது. அருகிலேயே பலிபீடம் அமைந்துள்ளது. இவற்றைக் கடந்து முன்னேறினால் கல் தூண்கள் தாங்கிய அழகிய மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபம் கோவில் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. அதை அடுத்து அமைந்துள்ளது மூலவர் கருவறை.

அதன் உள்ளே எந்திர பீடத்தில் அன்னை காளியம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். அம்மன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேர் மேல் பகுதியில் உள்ள எண்கோணங்களின் அமைப்பானது, அம்மன் விமானத்தைத் தாங்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. அம்மன் எந்திர பீடத்தில் வடக்கு நோக்கி அழகாய் அமர்ந்திருக்கிறாள்.

தலையில் அக்னி கிரீடம் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி, வலது காலை பூமி நோக்கி தொங்க விட்டபடி அமர்ந்திருக்கும், காளியம்மன் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். வலது மேற்கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் உடுக்கையை தாங்கியுள்ளது. கீழ்புறம் உள்ள வலது கரத்தில் சூலமும், இடது கரத்தில் அக்னி குண்டமும் தாங்கியுள்ளாள் அன்னை.

காத்தவராயன் சன்னிதி :

காளியம்மன் கருவறையை வலம் வந்து வெளியே வந்தால், காத்தவராயன் சன்னிதி உள்ளது. நான்கு தூண்கள் கொண்ட மண்டபத்தில் காத்தவராயன் உள்ளார். சுற்றிலும் சுவர்கள் இல்லாமல் வெட்டவெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும், இவரது வலது கையில் அரிவாளும், இடது கையில் கேடயமும் தாங்கியுள்ளார்.

கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களை அணிந்துள்ளார். மேலும் நிமிர்ந்த நெஞ்சோடு, உருட்டும் விழிகள், முறுக்கு மீசை என ஒரு போர்வீரன் தோற்றத்துடன் கம்பீரமாக நிற்கும் அவரைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காளியம்மனுக்கு காவல்காரன் என்பதால்தான் இந்த கம்பீரமோ என்னவோ!

இந்த காத்தவராயன் அகிலாண்டபுரம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். அந்த பகுதி மக்கள் காத்தவராயனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதே அதிகம். குடும்பத்தில் குழந்தை பிறந்ததும் முதலில் முடி காணிக்கை செலுத்துவது காத்தவராயன் சுவாமிக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

காலபைரவர் :

ஆலயத்தில் கருப்பசாமிக்கு தனி சன்னிதி இருக்கிறது. இவரும் நின்ற கோலத்திலேயே அருள்பாலிக்கிறார். இடது பக்கம் சாய்ந்த கொண்டை அணிந்திருக்கும் அவர், வலது கையில் வாளை மேல்புறமாக ஏந்தியபடியும், இடது கையில் உள்ள தண்டத்தை கீழ்நோக்கி ஊன்றியபடியும் காட்சி தருகிறார்.

பெரிய மீசை, விரிந்த விழிகள், கழுத்தில் ஆபரணங்களுடன் காணப்படும் கருப்பசாமியை வேண்டிக்கொண்டால், எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சிவனின் அம்சமாக பார்க்கப்படும் கால பைரவரும் நின்ற கோலத்திலேயே இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.

அவரது நாய் வாகனம் அருகில் உள்ளது. சிவனின் அம்சம் என்பதால், அக்னி சடை முடியை தாங்கியுள்ளார். நான்கு கரங்களைக் கொண்ட இவர், மேல்புற வலது கரத்தில் உடுக்கையையும், இடது கரத்தில் நாகத்தையும் பற்றிக்கொண்டிருக்கிறார். அதே போல் கீழ்புற வலது கரத்தில் சூலத்தையும், இடது கரத்தில் அக்னி சட்டியையும் ஏந்தியுள்ளார். இந்த கால பைரவருக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் நினைத்தவை நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

கல்தூண் மண்டபம் :

ஆலயத்தில் உள்ள கல் மண்டபம், 16 கல் தூண்களைத் தாங்கி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். அழகான இந்த மண்டபத்தில் அமர்ந்துதான் பக்தர்கள், அம்மனை நோக்கி துதி பாடல்களை பாடி வணங்கி வழிபடுகின்றனர். பெண்கள் நடத்தும் திருவிளக்கு பூஜையும் இந்த மண்டபத்தில் வைத்தே நடத்தப்படுகிறது.

கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது முளைப்பாரி சுமந்து வந்து, இந்த மண்டபத்தில் வைத்துதான் கும்மி அடித்து, அம்மன் பாடல் பாடி வழிபாடு நடத்துவார்கள். காளியம்மன் என்ற பெயரைத் தாங்கியிருந்தாலும், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னையானவள், சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள்.

இளகிய மனம் கொண்ட அன்னையிடம், வேண்டுதல் செய்து வைக்கும் கோரிக்கைகள் யாவும், உடனடியாக நிறைவேற்றப்படுவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள். சாந்த சொரூபிணியாக இருந்தாலும், அன்னை தவறு செய்தவர்களை தண்டிக்க மறப்பதில்லை.

தெரிந்தே தவறு செய்பவர்கள், அன்னையின் பெயரைச் சொல்லி சத்தியம் செய்பவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்பது இங்கு நிலவும் சில செவி வழிக் கதைகளின் மூலம் தெரியவருகிறது. இங்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அன்னையில் ஆலயத்தில் வைத்து சத்தியம் வாங்கப்படுகிறது. பொய் சத்தியம் கூற அனைவரும் பயம் கொள்வதால், உண்மை வெளிப்பட்டு விடுகிறது.

திருவிழா :

அகிலாண்டபுரம் காளியம்மன் கோவில் திருவிழா, சித்திரைத் திருவிழாவாக மே மாதம் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். கோவில் திருவிழாவின் போது ஆலயத்தில் சமபந்தி விருந்து நடைபெறும். இது ஆலயத்திற்கு வரும் மக்களிடையே எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதை பறைசாற்றுவதற்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

விழாவின் போது பால் குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்து வருதல், மாவிளக்கு போடுதல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக செய்யப்படும். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக சாமக் கொடை நடக்கிறது.

அப்போது அம்மனை நினைத்து மெய்மறந்து வழிபாடு செய்வார்கள். அந்த சமயத்தில் குண்டூசி கீழே விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருக்குமாம். விழாவின் மறுநாள் ஆலயத்தின் முன்பு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் விழா நடைபெறும்.

அமைவிடம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு என்னும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் தலம் உள்ளது. மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் இருக்கிறது. கோவில்பட்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், சாலை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயத்தை தரிசிக்கலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum