Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில்

Go down

உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில் Empty உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:16 pm

மூலவர் : நல்லாண்டவர் என்ற மாமுண்டி
தல விருட்சம் : காட்டு மின்னை மரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : மணப்பாறை
மாவட்டம் : திருச்சி

திருச்சி மாவட்டம் மணப் பாறை அருகே உள்ளது நல்லாண்டவர் கோவில். இங்கு மூலவராக நல்லாண்டவர் என்ற மாமுண்டி வீற்றிருக்கிறார். உற்சவராக அம்மன் உள்ளார். சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவிலாக இந்த தலம் திகழ்ந்து வருகிறது.

இத்தலத்தில் சப்த கன்னி மார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார்.

அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக் கொள்கிறார். காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பெரிய சுற்றுப்பிரகாரத்துடன் அமைந்த இத்தலத்தில் அனுமதி விநாயகர், மதுரை வீரன், பாரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, ஒங்கார விநாயகர், பேச்சியம்மன், பட்டத்து யானை, நல்லாண்டவர் யானை, தெப்பக்குளத்து முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உடன்பிறந்தவர்களுக்கு தொந்தரவு, கணவன் மனைவி பிரச்சனை, விஷ ஜந்துக்களால் தொந்தரவு, பெண்களுக்கு மனது ரீதியாக ஏற்படும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து நல்லாண்டவரிடம் முறையிட்டால் அண்ணனாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய உடன் நல்லாண்டவருக்கு வேஷ்டி, துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி, அர்ச்சனை செய்கிறார்கள். நல்லாண்டவரின் வாகனமாக யானையும், காவல் தெய்வமாக புளிகருப்பண சுவாமியும், அவருக்கு வாகனமாக குதிரையும் உள்ளது. மாயமானை ராமர், பூண்டிய’ (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது.

இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோவில் வரலாறு ஒப்பிடப்படுகிறது. மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார்.

ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ் ணவி, வாராஹி, இந்தி ராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களை துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர்.

இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார். சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள் என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார்.

இருப்பிடம் :

திருச்சியில் இருந்து மணப்பாறை சென்று அங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஆண்டவர் கோயிலுக்கு டவுன் பஸ், மினி பஸ், ஆட்டோக்களில் செல்லலாம். அருகிலேயே மணப்பாறை ரெயில் நிலையம் உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum