Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உலகில் பெரிய அங்கோர்வாட் கோவில்

Go down

உலகில் பெரிய அங்கோர்வாட் கோவில் Empty உலகில் பெரிய அங்கோர்வாட் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:11 pm

உலகில் பெரிய அங்கோர்வாட் கோவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் தான் உலகிலேயே பெரிய இந்து கோவில் இருக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால் உலகிலேயே பெரிய இந்து கோவில் கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே பெரிய இந்து கோவில் ஸ்ரீரங்கம் கோவிலாகும்.

அதைவிட 3 மடங்கு பெரியது அங்கோர்வாட் கோவில். இது விஷ்ணு கோவிலாகும். 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் 2-ம் சூரியவர்மன் அங்கோர்வாட் கோவிலை கட்டினான். கி.பி. 1113 முதல் 1150-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த அவன் போரில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த கோவிலை கட்டினான்.

கோவிலை கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆனது. மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக கோவில் அமைந்துள்ளது. கோவில் செவ்வக வடிவில் உள்ளது. கோவிலை சுற்றி 4 பக்கமும் 200 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அகழியை கடக்க பாலம் உள்ளது.

அகழியை கடந்ததும் கோவிலை சுற்றி பிரமாண்ட மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது 802 மீட்டர் அகலம் 1024 மீட்டர் நீலம் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. அதில் இருந்து 500 மீட்டர் தூரம் கடந்து சென்று கோவில் முன்பகுதியை அடைய வேண்டும். கோவிலில் 5 பிரமாண்ட கோபுரங்கள் உள்ளன. 4 கோபுரங்கள் பக்கவாட்டிலும், ஒரு கோபுரம் அதன் நடுவிலும் கட்டப்பட்டுள்ளது.

இது மற்ற கோபுரத்தை விட மிகப்பெரியதாக இருக்கிறது. இதன் உயரம் மட்டும் 213 அடி. கோவில் மட்டுமே 8 லட்சத்து 20 ஆயரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. அதாவது 203 ஏக்கர் பரப்பளவில் கோவில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில் முன் பகுதிக்கு வந்ததும் அதில் இருந்து மத்திய கோபுரத்தை நோக்கி படிக்கட்டுகள் செல்கின்றன. 3 அடுக்காக செல்லும் இந்த படிக்கட்டுகள் முடிவில் மத்திய கோபுரத்தின் அடிப்பகுதிக்கு வருகிறது. இதன் கீழ் கர்ப்பகிரகம் உள்ளது. இங்குதான் விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை இப்போது அந்த இடத்தில் இருந்து அகற்றி பக்கவாட்டில் வேறு ஒரு இடத்தில் வைத்து உள்ளனர்.

கோவிலுக்குள் 4 பிரகார மண்டபங்கள் உள்ளன. அத்தனையும் மிக பிரமாண்டமாக இருக்கிறது. இவற்றின் பக்கவாட்டு சுவரில் ராமாயணம், மகாபாரதம், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை பாம்பால் கடைந்த காட்சி மற்றும் மன்னன் சூர்யவர்மன் போர் வெற்றி காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. ராமாயண காட்சிகள் மட்டுமே 600 மீட்டர் நீளத்துக்கு செல்கிறது.

இவ்வளவு பெரிய சிற்பம் உலகில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் பக்கவாட்டு சுவர்கள் முழுவதும் தேவதைகள், நடனமங்கைகள், ஆண்கள், மிருகங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேவதைகள் சிற்பங்கள் மட்டுமே 1796 உள்ளன. இந்த சிற்பங்கள் 30 சென்டி மீட்டர் உயரத்தில் இருந்து 110 சென்டி மீட்டர் உயரம் வரை பல்வேறு வடிவங்களில் உள்ளன.

மேற்கூரை சுவர், பக்கவாட்டு சுவர், தூண்கள் என அனைத்தும் பல்வேறு வகை சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலில் எதைபார்த்தாலுமே பிரமாண்டமாகத்தான் இருக்கிறது. உலகிலேயே பழங்கால பிரமாண்ட கட்டிடங்களாக எகிப்து பிரமிடும், தாஜ்மகாலுமே கருதப்படுகின்றன. அதைவிட அங்கோர்வாட் கோவில் தான் பிரமாண்டமானது என்று பல நிபுணர்கள் வாதிடுகிறார்கள்.

1586-ம் ஆண்டு இந்த கோவிலை சுற்றி பார்த்த போர்ச்சுக்கல் துறவி அன்டோனியா மடல்னா “இந்த கோவில் கட்டுமானத்தின் பிரமாண்டத்தை பேனாவால் கூட விவரித்து எழுதிவிட முடியாது” என்று கூறியுள்ளார். இதை சுற்றி பார்த்த அமெரிக்க பெண் ஒருவர் ‘நான் இறந்தபிறகு என் உடலை எரியூட்டி சாம்பலை அங்கோர்வாட் கோவில் பகுதியில் தூவுங்கள்’ என்று எழுதி வைத்துள்ளார்.

தேவதச்சர்கள் பூலோகத்துக்கு வந்து ஒரே நாள் இரவில் அங்கோர்வாட் கோவிலை கட்டியதாக உள்ளூர் மக்கள் நம்பி வந்தனர். ஆரம்பத்தில் இதை பார்த்த வெள்ளைகாரர்கள் ரோம மன்னர்கள் இதை கட்டினார்கள் என்று கருதினார்கள். பிற்காலத்தில் கோவிலை ஆய்வு செய்தபோது பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்தன.

அதில் தான் 2-ம் சூர்யவர்மன் கோவிலை கட்டியது தெரியவந்தது. எகிப்து பிரமீடுகள் பெரிய, பெரிய பாறாங்கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ளன. இதேபோல இந்த கோவிலும் பெரிய பாறாங்கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இவற்றுடன் செங்கல்களையும் பயன்படுத்தி உள்ளனர். கோவிலை கட்ட 60 லட்சத்தில் இருந்து 1 கோடி வரையிலான பாறாங்கற்களை பயன்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு கல்லும் 1.5 டன் எடை கொண்டது. இந்த கற்களை 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். அவற்றை தரை வழியாக கொண்டு வருவது கடினம் என்பதால் நீர்வழி பாதை அமைத்து மிதவை மூலம் கொண்டு வந்துள்ளனர். இதற்காக மலையில் இருந்து 35 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி அருகில் உள்ள ஏரிக்கு பாதை அமைத்துள்ளனர்.

பின்னர் ஏரியில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஏரியின் இன்னொரு பக்கம் வந்துள்ளனர். அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் இன்னொரு கால்வாய் வெட்டி பாதை அமைத்து கோவிலுக்கு பாறைகளை கொண்டுவந்துள்ளனர். இப்படி கிட்டத்தட்ட 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பாறைகளை படகுகள் வழியாக கொண்டு வந்து இருப்பது மிகப்பெரிய ஆச்சரியமாக கருதப்படுகிறது.

அதுவும் எந்தவித எந்திர சாதனங்களும் இல்லாத காலத்தில் இவை நடந்திருக்கிறது என்பதை பார்த்தால் பிரமிப்பாகவே உள்ளது. கற்களை வெட்டி எடுத்து இங்கு கொண்டு வருவதற்கு மட்டுமே பிரத்யேகமாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை தொடர்பாக ரோஜர் ஹாப்கின்ஸ், மார்க்லேனர் ஆகிய குவாரி தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒரு கணக்கு சொல்லி இருக்கிறார்கள்.

12 தொழிலாளர்கள் 22 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் 400 டன் கற்களை வெட்டி எடுக்க முடியும் என்று கணக்கிட்டு இருக்கின்றனர். அப்படியானால் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கற்களை வெட்டி எடுத்து கொண்டுவர எத்தனை தொழிலாளர்கள் எத்தனை நாட்கள் வேலை பார்த்து இருப்பார்கள்? நினைத்து பார்த்தாலே மயக்கம் வருகிறது.

பின்னர் இந்த கற்களை கொண்டுவந்து ஒன்றோடு ஒன்று இணைப்பு ஏற்படுத்தி கச்சிதமாக பொருத்தி கட்டிடத்தை கட்டி உள்ளனர். அதன்பிறகு கற்களை பாலிஸ் செய்து சிற்பங்களையும் செதுக்கி உள்ளனர். மன்னர் 2-ம் சூர்யவர்மன் மறைவுக்கு பிறகு அவரது வம்சாவழியை சேர்ந்த ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்தான்.

அடுத்து வந்த வம்சாவழி மன்னர்கள் காலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. புத்த மதத்தை சேர்ந்த மன்னர்கள் நாட்டை கைப்பற்றி கோவிலை புத்தமத கோவிலாக மாற்றினார்கள். 14-ம் நூற்றாண்டில் இருந்து அது இன்றுவரை புத்தமத கோவிலாகவே உள்ளது. இயற்கை சீற்றங்கள், படையெடுப்பு போன்றவற்றால் கோவிலில் சில பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும் இப்போதும் அங்கோர்வாட் கோவில் கம்பீரமாகவே உள்ளது.

யுனஸ்கோ அமைப்பு இதை புராதான சின்னமாக அறிவித்து கோவிலை பாதுகாக்க பெருமளவு நிதி உதவியும் செய்து வருகிறது. கோவிலை சுற்றிபார்க்க ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் வெளிநாட்டு பக்தர்கள் வருகிறார்கள்.

பக்கத்து நாடான தாய்லாந்து தலைநகரம் பாங்காங்கில் இருந்து 30 நிமிட விமான பயணத்தில் கோவிலை அடையலாம். தரை வழியாக சென்றால் 10 மணி நேரம் ஆகும். சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. எனவே விமான பயணத்தையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.

தமிழன் கட்டிய கோவிலா?

அங்கோர்வாட் கோவிலை கட்டிட சூரியவர்மன் தமிழ் மன்னர்கள் வம்சாவழியை சேர்ந்தவன் என்ற ஒரு கருத்து உள்ளது. ஒரு காலத்தில் சோழமன்னர்கள் இலங்கை, மலேசியா, தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளை எல்லாம் வென்று ஆட்சி செய்துள்ளனர். அப்போது கம்போடியாவை சோழமன்னனின் பிரதிநிதியாக ஆண்டவர்கள் தான் சூர்யவர்மனின் முன்னோர்கள் என்று கூறப்படுகிறது.

எனவே சூர்யவர்மன் தமிழனாக இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கோவில் கட்டிடம் முழுவதும் திராவிட கட்டிடகலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள கோவில்கள், சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டிடங்கள் போன்ற வடிவமைப்பும் அங்கோர்வாட் கோவிலில் இடம் பெற்றுள்ளன.

கோவிலில் ஒரு இடத்தில் முருகன் மயில்மேல் அமர்ந்து இருப்பது போன்ற சிற்பம் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே முருகனுக்கு கோவில் உண்டு. சிவனுக்கு விநாயகர் மட்டுமே மகன் என்றும், முருகன் என்ற மகன் கிடையாது என்று இப்போதும் கூட வடமாநிலங்களில் கூறுவார்கள்.

ஆனால் எங்கேயோ உள்ள கோவிலில் தமிழ் கடவுளான முருகனின் சிற்பமும் உள்ளது என்றால் நிச்சயம் இதை தமிழ்மன்னன் தான் கட்டி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சூர்யவர்மன் பல்லவ மன்னனின் வம்சாவழியை சேர்ந்தவர் என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஏன்என்றால் பல்லவ மன்னர்கள் பலர் தங்கள் பெரியின் பின்னால் ‘வர்மன்’ என்று பெயரை இணைத்து கொள்வது வழக்கம்.

சூரியவர்மனின் வம்சாவழி மன்னர்கள் பெயர் ஜெயவர்மன், உதயஆதித்யவர்மன், ராஜேந்திரவர்மன், இந்திரவர்மன், ஹர்சவர்மன், நரேந்திரவர்மன் என நீழ்கிறது. எல்லாமே தமிழ் பெயர் போலவே உள்ளன. அங்கோர்வாட்டின் முந்தைய பெயர் ‘யசோதாபுரம்’. அதுகூட தமிழ் பெயராகவே இருக்கிறது. இதையெல்லாம் வைத்து சூரியவர்மன் தமிழ்மன்னன் தான் என்று பலரும் அடித்து கூறுகிறார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum