Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில்

Go down

அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் Empty அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில்

Post by oviya Sat Apr 18, 2015 3:10 pm

மூலவர் : ஏடகநாதேஸ்வரர்
அம்மன்/தாயார் : ஏலவார்குழலி, சுகந்த குந்தளாபிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : பீரம தீர்த்தக்குளம், வைகைநதி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஏடகம்
ஊர் : திருவேடகம்
மாவட்டம் :மதுரை

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவராத்திரியன்று பைரவர் பூஜை :

எல்லாசிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு தான், இரவு நேரத்தில் நான்கு ஜாம அபிஷேகம், பூஜை நடைபெறும். ஆனால், திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும்.

அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 194 வது தேவாரத்தலம் ஆகும்.

தல வரலாறு:

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்'' என்று சொல்லி பாடினார்.

உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான்.

கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர்.

அதாவது, "அத்திநாத்தி' என்று எழுதிய ஏட்டினை சமணர்களும்," வாழ்க அந்தணர்' என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. போட்டி துவங்கியது.

சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. சம்பந்தர் "வன்னியும் மத்தமும்' என்ற பதிகத்தை பாடினார். அப்போது ஏடு கரை சேர்ந்தது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே "திரு ஏடு அகம்' எனப்பட்டு, "திருவேடகம்' என மருவியது. இத்தலத்தில் அமைந்த கோயிலில் சுவாமி ஏடகநாதர், அம்பாள் ஏலவார் குழலியுடன் அருள் செய்கிறார்.

கோவில் உள்அமைப்பு:

கிழக்கு நோக்கிய கோயில், வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு ஐந்து நிலை கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சன்னதிகள், பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருமணஞ்சேரியைப் போல திருமணப் பிரார்த்தனைக்குரிய தலம் திருவேடகம்.

சிறப்பு பிரார்த்தனை :

திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப் படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum