Top posting users this month
No user |
Similar topics
குழந்தைகளை காக்கும் அணைக் கருப்பசாமி கோவில்
Page 1 of 1

அணைக் கருப்பசாமி :
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மக்கள் முல்லையாற்றின் குறுக்கே புதிதாகத் தடுப்பணை ஒன்று கட்டி அந்தத் தண்ணீரைக் கொண்டு விவசாயப் பணிகளைச் செய்திட திட்டமிட்டனர். புதிய அணையின் கட்டுமானப் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி நடக்கவும், அணை பாதுகாப்புக்கும் காவலாக அணைக்கு அருகிலேயே கருப்பசாமி கோவில் ஒன்றை அமைத்தனர். இந்தக் கோவில் தற்போது அணைக் கருப்பசாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைக் காவலர் :
கிராமங்களில் இருக்கும் மக்கள் தங்களையும், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள், விலங்குகள் என்று அனைத்திற்கும் கருப்பசாமியே காவலாக இருந்து காக்க வேண்டும் என்று வணங்குகின்றனர். இது போல், தீய சக்திகளிடமிருந்து குழந்தைகளைக் காக்க கருப்பசாமி இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, இரவு நேரங்களில் குழந்தைகளின் கால்களின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் வழக்கம் கிராம மக்களிடம் இன்றும் இருந்து வருகிறது. இதனடிப்படையில் கருப்பசாமி குழந்தைகளின் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறார்.
வழிபாடு :
இந்த ஊரில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தீய சக்திகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காத்திட அணைக் கருப்பசாமியிடம் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் ஆன பின்பு குழந்தையின் குடும்பத்தினர் தங்கள் குழந்தையைக் காத்த அணைக் கருப்பசாமிக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இந்தச் சிறப்பு வழிபாட்டில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு அசைவ உணவும் சேர்த்துப் படைக்கப்படுவது வழக்கத்திலிருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீய சக்திகளிடம் இருந்து குடும்பத்தை காக்கும் சங்கர நாராயணர் கோவில் புற்றுமண்
» அகிலம் காக்கும் அம்மே
» உயிர் காக்கும் இயற்கை உணவுகள்
» அகிலம் காக்கும் அம்மே
» உயிர் காக்கும் இயற்கை உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum