Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

Go down

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் Empty சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

Post by oviya Sat Apr 18, 2015 3:02 pm

புராண பெயர்(கள்): பிரம்மபுரம், சீர்காழி
பெயர்: சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
ஊர்: சீர்காழி மாவட்டம்: நாகப்பட்டினம்
மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர்: சோமஸ்கந்தர்
தாயார்: பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம்: பஞ்சரத்திர ஆகமம்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்

உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த பிரளயக் காலத்தில், சிவபெருமான் 64 கலைகளை உடையாக உடுத்தி, பிரணவத்தை தோணியாக அமைத்து, பார்வதி தேவியுடன் அதில் ஏறினார். அப்போது அந்தத் தோணி சீர்காழி வந்தது. எல்லா இடங்களும் அழிந்த நிலையில், இவ்விடம் மட்டும் அழியாமல் இருப்பதைக் கண்டு, இதுவே மூலத் தலம் என்று அம்பிகையிடம் கூறினார் ஈசன். மேலும் உமாதேவியுடன் இத்தலத்திலேயே தங்கினார். ஈசன் தோணியில் வந்ததால், 'தோணியப்பர்' ஆனார்.

பெயர்க்காரணம்:

சிதம்பரம் நடராஜப் பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, காளிதேவி சிவ பூஜை செய்து வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம் 'சீகாளி' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி 'சீர்காழி' என்றானது. தோணிபுரம், வேணுபுரம், கழுமலம் என பல்வேறு பெயர்களைத் தாங்கியதாக இந்தத் தலம் இருக்கிறது. திருஞானசம்பந்தர் அவதரித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. திருஞானசம்பந்தர் சீர்காழியில்தான், முதல் முதலான திருநாவுக்கரசரை 'அப்பர்' என்று அழைத்தார். மூன்று மூர்த்தங்கள் சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள்.

தோணியப்பரும், பெரியநாயகி அம்மனும் எழிலுடன் கம்பீரமாக தோற்றத்துடன் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி அருள்கிறார்கள்.

இம்மலைச் சிகரத்தைப் பார்த்து தான் 'அம்மே அப்பா' என அழைத்தருளி அழுது தொழுதார் சம்பந்தர். சம்பந்தருக்கு பெரியநாயகி அம்மையுடன் காட்சி அளித்தவர் இந்த தோணியப்பரே. இவரே தோடுடைய செவியன். இதைத் தாண்டி சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர் சங்கம வடிவினராக உள்ளார்.

இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியை தடிந்து, நரசிம்மத்தின் தோலைச் சட்டையாக போர்த்திக் கொண்டதால் சட்டை நாதர் என்ற திருநாமம். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். முத்துச் சட்டைநாதர் என்றும் அழைப்பார்கள். நின்ற திருக்கோலத்தில் வலது கரத்தின் கட்டை விரலும், ஆள் காட்டி விரலும் சின் முத்திரைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது. அருளும், வீரமும் ஒரு சேர்ந்த அமைந்த வடிவத்தில் சட்டைநாதர் வீற்றிருக்கிறார்.

சோமாஸ்கந்த அமைப்பு :

இந்தத் திருக்கோவில் தேவஸ்தானமே, சட்டைநாதர் தேவஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது. இத்தல தெற்கு பிரகாரத்தில் வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்கின்றனர். ஆலய உட்பிரகாரத்தில் காலபைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், தேவேந்திர லிங்கம், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. ஜூரகரேஸ்வரரும் உள்ளார்.

இவரை வழிபட்டால் காய்ச்சல், பிற உடல் நோய்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருநிலை நாயகி அம்பாள் நின்றத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அன்னையின் சன்னிதிக்கு எதிரே மகிமை மிகுந்த பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களுள் முதன்மையானது பிரம்ம தீர்த்தமே.

இந்தக் குளக்கரையில்தான் பார்வதி தேவி, மூன்று வயதான திருஞானசம்பந்தருக்கு, திருமுலைப்பாலை பொற்கிண்ணத்தில் புகட்டினாள். இதையடுத்து சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்னும் பதிகம் பாடினார். இத்தல ஈசன் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் திருஞானசம்பந்தருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.

திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அவதாரம் என்பதால் இந்த அமைப்பு சோமாஸ்கந்த அமைப்பாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். சித்திரை மாதத்தில் பெருந் திருவிழாவின் இரண்டாம் நாள் 'திருமுலைப்பால் விழா' நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு இத்தல பிரம்மபுரீஸ்வரர் அருகில் உள்ள உற்சவரான சம்பந்தரின் சன்னிதியில் தரும் பாலை வாங்கி புகட்டினால் குழந்தைகளை தோஷங்கள், தீவினைகள், பிணி முதலியன அண்டாது.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். இத்தல அம்பாளுக்கு நவராத்திரி, ஆடிப்பூரம் விசேஷம். இத்தல விநாயகர் ருணம் தீர்த்த விநாயகர். இந்திரனுக்காக இத்தல ஈசன் மூங்கில் மரமாகக் காட்சி கொடுத்தார். இங்குள்ள நந்தவனம் இந்திரன் சிவ பூஜைக்காக அமைத்தது. பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் பீடமும் இங்கு உள்ளது.

கணநாத நாயனார் அவதரித்த பதியும் இதுவே. பாரிஜாதம் இந்த ஆலயத்தில் தல மரமாக உள்ளது. சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் பாடல்பெற்ற சிறப்புமிக்க தலம் என்ற சிறப்பும் இவ்வாலயத்திற்கு உண்டு. நம்பியாண்டார் நம்பி, பூந்துருத்தி காடநம்பி, பட்டினத்தார். ராமலிங்க அடிகளார் ஆகியோரும் இத்தல இறைவனை நினைத்து பாடல் பாடியுள்ளனர்.

இந்தக் கோவிலில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழ் பாடலில் பாடியுள்ளார். மயிலாடுதுறையில் இருந்து வடக்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து தெற்கே 19 கிலோமீட்டர் தூரத்திலும் சீர்காழி திருத்தலம் உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum