Top posting users this month
No user |
தவறி விழுந்து பலியான இளைஞர்: ரயிலுக்கு தீ வைத்த கிராம மக்கள்
Page 1 of 1

ஒடிஷாவில் இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து பலியானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரயிலுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
ஒடிஷாவின் பூரி மாவட்டத்தில் உள்ள தெலாங் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பூரி-பர்பில் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது.
அப்போது புவனேஸ்வரில் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்த ரதிகண்டா சதோய் என்ற 22 வயது இளைஞர், அந்த ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தெலாங் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. ஆனால் அந்த ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் மெதுவாக செல்லும்.
எனவே மக்களில் சிலர் அந்த நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து இறங்கிவிடுவார்கள்.
ரதிகண்டாவும் அப்படி கீழே குதித்தபோது தவறி விழுந்து அதே ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் இதனை அறிந்த உள்ளூர் கிராம மக்கள், அந்த இளைஞரின் உடலை ரயில்வே பொலிசார் எடுக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை தெலாங் ரயில் நிலையத்தில் ஒன்று திரண்ட உள்ளூர் கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியபோது பூரி-பர்பில் ரயில் மீண்டும் தெலங்கா ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அந்த ரயிலை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் நஷ்ட ஈடு தரக் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பாதுகாப்புப் படை உயரதிகாரி பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் ரயில் நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும், பெட்ரோல் கேனை எடுத்து வந்து பூரி-பர்பில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது ஊற்றி சிலர் தீ வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் தடியடி நடத்தி ஊர்மக்களை விரட்டி அடித்ததோடு, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.
இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து நாசமான போதிலும், ஓட்டுநரும் பயணிகளும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், நேற்று மாலை 3 மணியளவில் இந்த நிலைமை சீரானதோடு, இந்த தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum