Top posting users this month
No user |
Similar topics
பில்லி, சூனியம், செய்வினை நீங்க ஈசன் பதிகம்
Page 1 of 1
பில்லி, சூனியம், செய்வினை நீங்க ஈசன் பதிகம்
கூன் பாண்டியன்... நெடுமாற பாண்டியன் என்பதுதான் அவன் பெயர் என்றாலும், கூன் விழுந்தவன் என்ற காரணத்தால் ‘கூன் பாண்டியன்’ என்ற பெயர் அவனுக்கு நிலைபெற்று விட்டது. கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவி இருந்தான். அதனால் சைவ சமயத்தை எதிர்த்து வந்தான். ஒரு முறை கூன் பாண்டியன் ஆட்சி செய்த மதுரைக்கு திருஞானசம்பந்தர் வந்து தங்கியிருந்தார்.அப்போது சமணர்கள், சம்பந்தர் தங்கியிருந்த மடத்தை தீயிட்டு கொளுத்தினர்.
சம்பந்தர், ‘அந்தத் தீ அரசனையே சாரட்டும்’ என்று கூறி ‘செய்யனே திருஆலவாய் மேவிய...’ என்ற பதிகத்தை பாடினார். (பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் துன்புறுவோர் இந்த பதிகத்தை பாடி, ஈசனை தொழுதால் தீவினைகள் அண்டாது. மேலும் செய்தவருக்கே அந்த தீவினைகள் செய்து சேரும்). உடனடியாக தீயின் வெப்பம், கூன் பாண்டியனை வெப்ப நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான்.
அவனைச் சார்ந்திருந்த சமண சமயத் துறவிகளால் அந்த நோயை சரி செய்ய முடியவில்லை. கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசி, சிறந்த சிவ பக்தையாவார். அவரது வேண்டுதலால் சம்பந்தர், ‘மந்திரமாவது நீறு...’ என்ற பதிகம் பாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி சாம்பலை மன்னனுக்கு பூசினார். மறுநொடியே பாண்டியனின் நோய் நீங்கியது. இதையடுத்து மன்னன் மனம் சைவ சமயத்தை நாடிச் சென்றது. திருச்சிற்றம்பலம்
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.
சித்த னேதிரு ஆலவாய் மேவிய
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.
தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.
சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.
தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.
செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.
தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.
தாவி னான்அயன் தானறி யாவகை
மேவி னாய்திரு ஆலவா யாயருள்
தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.
எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
அப்பன் ஆலவா யாதி யருளினால்
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.
(பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் துன்புறுவோர் இந்த பதிகத்தை பாடி, ஈசனை தொழுதால் தீவினைகள் அண்டாது. மேலும் செய்தவருக்கே அந்த தீவினைகள் சென்று சேரும்)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பில்லி, சூனியம், அகலும் ஏடகநாதர் வழிபாடு
» வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருக பலன் தரும் ஈசன் ஸ்லோகம்
» அகிலாண்டேசுவரி பதிகம்
» வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருக பலன் தரும் ஈசன் ஸ்லோகம்
» அகிலாண்டேசுவரி பதிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum