Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உறையூர் அம்மன் திருத்தலங்கள்

Go down

உறையூர் அம்மன் திருத்தலங்கள் Empty உறையூர் அம்மன் திருத்தலங்கள்

Post by oviya Sat Apr 18, 2015 10:27 am

திருமண தடை நீக்கும் வெக்காளி அம்மன்

சோழர்களின் தலைநகராக விளங்கியது உறையூர். தற்போது திருச்சியின் ஒரு பகுதி. இங்குள்ள அம்மன் கோயில்கள் சிறப்புக்குரியவை. உறையூரை பராந்தக சோழன் ஆண்டு வந்தான். சரமா முனிவர் நாக லோகத்தில் உள்ள செவ்வந்தி மலரைக் கொண்டு வந்து பூவுலகில் பயிரிட்டு மலைக்கோட்டை தாயுமானவருக்குப் பூஜை செய்து வந்தார். பராந்தகசோழனின் சேவகர்கள் அவற்றைப் பறித்து சென்று அரசனின் மனைவியிடம் கொடுத்தனர். இதுகுறித்து முறையிட்டும் ஆணவத்துடன் மன்னர் திட்டியதால், முனிவர் மனம் வருந்தி, இறைவனிடம் முறையிட்டார்.

கடும் கோபமுற்ற தாயுமானவர், உறையூரை நோக்கி திரும்பி நெற்றிக்கண்ணை திறந்ததும் நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் பயந்து ஊரைவிட்டே ஓடினர். உறையூர் வெக்காளி அம்மனை மக்கள் வேண்ட, சினம் தணிக்க, அம்மன் முழு நிலவாக மாறி, தாயுமானவர் முன்பு தோன்றினாள். அன்று உறையூரை காத்த அன்னையை நன்றிப் பெருக்கோடு மக்கள் இன்றும் வணங்குகின்றனர். வழக்கமாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். வெக்காளி அம்மனோ வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சி.

கோயில் விமானம் இல்லாமல், வெட்ட வெளியில் அம்மன் அமர்ந்திருக்கிறாள். குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டிவிட்டால், அவை நிவர்த்தியாகின்றன. விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடையும், புத்திர தோஷமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மனம் இரங்கும் நாச்சியார்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் பிரசித்தி பெற்றது. மூலவர் அழகிய மணவாளன். திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் அம்மனைப் புகழ்ந்துள்ளனர். நந்த சோழ மன்னன் ஸ்ரீரங்கம் ரங்கநாதனின் தீவிர பக்தன். புத்திரப் பேறு குறித்துப் பெருமாளை வேண்டுகிறான். தன் பக்தனுக்காக மகாலட்சுமியையே மகளாக அவதரிக்கச் செய்கிறார் பெருமாள். வேட்டைக்குச் சென்ற மன்னன் தாமரைத் தடாகத்தில் கண்ட குழந்தையை கமலவல்லி என்று பெயரிட்டு வளர்க்கிறான். ஆண்டுகள் கழிந்தன. மன்னன் கனவில் தோன்றிய பெருமாள் தாம் கமலவல்லியை மணக்கவிருப்பதாகக் கூறினார்.

மன்னன் கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல அங்கு தாயார் பெருமாளுடன் கலந்துவிடுகிறாள். 108 திவ்யதேசங்களில் 2வதாக போற்றப்படும் இத்தலம், ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும், நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட் சோழரும் அவதரித்த பெருமைக்குரியது. வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் சொர்க்கவாசலைக் கடக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்கு மாசி தேய்பிறை ஏகாதசியில் தாயார் சொர்க்கவாசலைக் கடப்பார்.

வைகுண்ட ஏகாதசியில் இங்கு பரமபத வாசல் திறப்பதில்லை. உறையூர் நாச்சியார் திருநட்சத்திரம் ஆயில்யம். பங்குனி ஆயில்யத்தில் ஸ்ரீரங்கநாதர் உறையூரில் எழுந்தருளி பெருமாளும், தாயாரும் ஏக சிம்மாசனத்தில் சேர்த்தியில் காட்சி கொடுக்கிறார்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த கன்னிகைகளுக்கு விவாகத்தை தாயார் அருள்பாலிக்கிறார். பிரார்த்தித்தால் உடனே மனம் இரங்குவார் நாச்சியார்.

சுக பிரசவத்துக்கு குங்குமவல்லி

உறையூர் சாலை ரோட்டில் உள்ள மற்றொரு கோயில், 1800 ஆண்டு பழமைவாய்ந்த குங்குமவல்லி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயில். உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் இந்திரன் அனுமதியோடு நாக கன்னிகைகளில் ஒருவரான காந்திமதியை மணந்தார். காந்திமதி சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரை தினமும் வழிபட்டு வந்தார். தாயுமானவரை தரிசிக்க ஒரு நாள் புறப்பட்டபோது வெயிலின் தாக்கத்தால், கர்ப்பிணியாக இருந்த காந்திமதியின் உடல் சோர்வுற்றது.

காந்திமதி இறைவா உன்னை(தாயுமானவர்) இன்று தரிசிக்க முடியவில்லையே என்று ஓரிடத்தில் அமர்ந்து கண்ணீர்மல்க வேண்டினார். கர்ப்பவதியாக இருந்த காந்திமதியின் பக்தியில் இறங்கிய தாயுமானவர் இங்கு இறைவனாக வந்து காட்சி தந்தார். அப்போது உனது மகப்பேறு காலம் வரை நீ என்னை இங்கேயே தரிசிக்கலாம் என்று கூறி அருளினார். மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் போன்று பெரிய லிங்க திருமேனியுடன் இந்த ஆலயத்திலும் காட்சி தருகிறார். கோயிலில் ஸ்ரீகுங்குமவல்லி அம்மனை வளைகாப்பு நாயகி என அழைக்கிறார்கள்.

குங்குமவல்லி தாயாருக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடியில் பூரம் நட்சத்திரம் அன்றும், தை 3வது வெள்ளிக்கிழமையிலும் வளைகாப்பு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 3 நாள் விழா நடைபெறும். முதல் நாள் விழாவில் கர்ப்பிணிகள் அம்மனுக்கு வளையல் வழங்கி தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என வேண்டுவர். 2வது நாள் விழாவில் குழந்தைப்பேறு கிடைக்க பெண்கள் வளையல் வழங்குவர்.

3வது நாள் விழாவில் திருமண தடை, ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் வளையல் வழங்கி வேண்டுதல் செய்வர். இவ்வாறு 3 நாட்கள் நடக்கும் பூஜைக்கு பின்னர் பெண்களுக்கு தாயாருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படும். இத்திருவிழாவில் ஏராளமான பெண் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள்.

எதிரிகளை அழிக்கும் தில்லை காளி

இந்த கோயிலில் மற்றொரு சிறப்பு காளி சன்னதி. 300 ஆண்டுகள் முன்பு இங்கு காளிவழிபாடு இருந்தது. காளி இருந்த இடம் அருகில் பெரிய ஆல மரம் இருந்துள்ளது. அந்த மரம் பட்டுப்போய் பூமிக்குள் இறங்கியது. அங்கு விக்கிரகங்கள் இருந்தன. நான் இங்கே தான் இருக்கிறேன் என்று காளி கனவில் வந்து சொன்னதால் கோயிலில் ஏற்கனவே காளி இருந்த இடத்தில் அதாவது தரைமட்டத்தில் இருந்து பல அடிகள் கீழே 7 அடி உயர காளி சிலையை வைத்து இன்றும் வழிபாடு நடத்துகின்றனர்.

பூமி மட்டத்திற்கு கீழே உள்ள காளியை பாதாள காளி என்றும், அதற்கு மேலே உள்ள காளியை தில்லை காளி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இங்கு நடத்தப்படும் ஹோமத்தில் வரமிளகாய் மட்டும் போட்டு பூஜை செய்வார்கள். இந்த ஹோமம் ஒவ்வொரு ஆடி அமாவாசையன்றும் நடத்தப்படுகிறது. எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி உள்பட சகலவித தோஷங்களும் களையப்படுவதாக ஐதீகம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum