Top posting users this month
No user |
Similar topics
தேவப் பெருமாள் பக்தனிடமிருந்து ஏழரை நாழிகையில் விலகிய சனி பகவான்
Page 1 of 1

காஞ்சி தேவப் பெருமாளிடம் அதீத பக்தி கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் கனவில் தோன்றிய சனி பகவான், ‘இன்று முதல் உம்மை நான் ஏழரை வருடங்கள் பிடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்று கூறி மறைந்தார்.
இதனால் மிகவும் கலக்கமுற்ற திருக்கச்சி நம்பிகளைக் கண்ட தேவபெருமாள், சனீஸ்வரனை அழைத்தார். ‘நம்பிகள் எனது சிறந்த பக்தன். அவனை பிடிக்காதே’ என்று ஆணையிட்டார். சனி பகவானும் இறைவனின் ஆணைக்கிணங்கினாலும், தன் கடமையில் இருந்து தவறாமல் இருக்க, நம்பிகளை ஏழரை மாதங்கள் மட்டும் பிடித்துக் கொள்வதாக கூறினார்.
அதற்கு தேவபெருமாள் தடை விதித்தார். ‘அப்படியானால் ஏழரை நாட்களாவது பிடித்துக் கொள்கிறேன்’ என்ற சனி பகவானின் அந்த கோரிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டது. கடைசியில் ஏழரை நாழிகை மட்டும் பிடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். மறுநாள் புஷ்ப மாலைகளுடன் ஆலவட்ட கைங்கர்யம் செய்ய காஞ்சீபுரத்திற்கு புறப்பட்ட திருக்கச்சி நம்பிகளை, இறைவனின் சன்னிதியில் இருந்த தங்க வட்டிலை காணவில்லை என்று கூறி அரண்மனை காவலாளிகள் பிடித்துச் சென்றனர்.
தான் தங்க வட்டிலை எடுக்க வில்லை என்று கூறியும், திருக்கச்சி நம்பிகளை, மன்னன் விடுவிக்கவில்லை. இந்த நிலையில் ஏழரை நாழிகை முடிவுற்றது. அப்போது ‘தங்க வட்டில், கோவிலில் தான் இருக்கிறது’ என்று கோவில் அர்ச்சகர்களிடம் இருந்து மன்னனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருக்கச்சி நம்பிகளின் பாதம் பணிந்து அவரை விடுவித்தான் மன்னன்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum