Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனக்குறையை நீக்கும் மாங்காடு காமாட்சியம்மன்

Go down

மனக்குறையை நீக்கும் மாங்காடு காமாட்சியம்மன்  Empty மனக்குறையை நீக்கும் மாங்காடு காமாட்சியம்மன்

Post by oviya Sat Apr 18, 2015 10:13 am

குன்றத்தூர்-பூந்தமல்லி சாலையில் மாங்காடு கிராமம் உள்ளது. மாமரங்கள் நிறைந்திருந்ததால் மாங்காடு என பெயர் வந்தது. சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. ஒருமுறை கைலாயத்தில் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றுவிட்டது. இதனால் கோபமடைந்த சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். செய்த தவறை உணர்ந்து பார்வதி, சிவனிடம் மன்னிப்பு கேட்டார். பாவத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்தில் தவமிருந்து வழிபட வேண்டும்.

அதன்பின் தகுந்த காலத்தில் காட்சி தந்து பார்வதியை திருமணம் செய்து கொள்வதாக சிவன் கூறினார். அதன்படி, இங்கு வந்த பார்வதி பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்ற கோலத்தில் கடும் தவமிருந்தாள். அதன்பின் காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு பார்வதிக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு, “ஆதி காமாட்சி தலம்“ என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவையடுத்து காஞ்சிபுரம் சென்றார். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் அதன் சுற்றுப்பகுதிகளும் தீயினால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும்போது, ஆதி சங்கரர், மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என்பது இக்கோவிலின் வரலாறு. அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்து விட்டு தான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகிறது. இக்கோவிலில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது. ஸ்ரீ சக்ரமே பிரதானமாக கருதப்படுகிறது. பஞ்சலோக காமாட்சிக்கு அபிஷேகமும், ஸ்ரீ சக்ரத்துக்கு அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன்மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.

புரட்டாசி பவுர்ணமியன்று இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் ஆகியவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆனித்திருமஞ்சனம் விசேஷ நாட்கள்.
இக்கோவிலில் ஆறு வார வழிபாட்டு முறை முக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகிறது.

ஏதாவது ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனை தரிசித்து, பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்தபின், இதன் பயனால் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை மணந்து கொண்டாள். கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

நடை திறந்திருக்கும் நேரம்

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். மற்ற தினங்களில் காலை 6மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 3மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum