Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாயிபாபாவின் நாமஸ்மரணம் மற்றும் உபதேச பொன்மொழிகள்

Go down

சாயிபாபாவின் நாமஸ்மரணம் மற்றும் உபதேச பொன்மொழிகள் Empty சாயிபாபாவின் நாமஸ்மரணம் மற்றும் உபதேச பொன்மொழிகள்

Post by oviya Sat Apr 18, 2015 9:33 am

ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு நாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப் பெயர்), நிரதாக்னி ஹோத்தரன் (ஷீர்டியில் அவரருகே துனி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்), அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர், தியான ஸ்வரூபி, அவரே பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன், அப்படிப்பட்ட சாயிநாதரை ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோம். ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜய்!

தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில், பொறாமை, கோபம், துவேஷம், உதாசீனப்படுத்துதல் போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம்? என்று கேட்கிறார் சாயிபாபா. நிரந்தரம் இல்லாத ஈனமான, அருவருப்பான ஒரு விநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர, நிரந்தரமான சந்தோஷம் ஒன்று இருக்கிறது என்பதை அறியவில்லை. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ?

க்ருதே ஜனார்த்தனோ, த்ரேதாயாம் ரகு நந்தன:
த்வாபரே ராம கிருஷ்ணௌச
கலௌ ஸ்ரீ ஸாயிநாத:

க்ருத யுகத்தில் உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை மூலமும், த்ரேதாயுகத்தில் யாகத்தின் மூலமும், த்வாபர யுகத்தில் பூஜை முறையிலும் தெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டும் போதும் என்கிறார் சாயி. நாமஸ்மரணையிலும் குண நாமஸ்மரணம் விசேஷம். யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ, அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயணம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது, மனது பகவானுடன் ஐக்கியமாகிறது. இதன் மூலமே முழு பலன் அடைய முடியும்.

கண்மூடித்தனமாக இல்லாமல், எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து, கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, எனது நாமத்தை ஸ்மரனை செய்தால் போதும் என்கிறார் பாபா. அதோடு பாபா கூறிய மற்றொரு உன்னதமான விஷயம். பலவகையில் வழி தவறி ஓடும் மனதை, அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார். வழி தவறிய மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நம் மனதை நாமே கட்டுப்படுத்தி, அதற்குப் பிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.

அவ்வாறு, நம் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அது பூரண விசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை, பஜனை, பாராயணம், ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும்.

ஸத் ஸங்கத்வே நி: ஸங்கத்வம்
நி: ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச் சலதத்யம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி

ஸ்ரீ ஸாயிபாபாவின் பதினொரு உபதேச பொன்மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கின்றானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகரியத்தை அடைகின்றான்.

2. துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைகிறார்கள்.

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்..

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மகிவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கின்றேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னைக் கடாக்ஷிக்கிறேன்.

9. நீ என் பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum