Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அல்லல் அகற்றி அரவணைக்கும் அக்னீஸ்வரர்

Go down

அல்லல் அகற்றி அரவணைக்கும் அக்னீஸ்வரர்  Empty அல்லல் அகற்றி அரவணைக்கும் அக்னீஸ்வரர்

Post by oviya Sat Apr 18, 2015 9:26 am

குவளை பூக்கள் கருநீல நிறமாக காட்சி தரும். இந்தப் பூச்செடிகள் நிறைந்திருந்த பகுதிதான் (கருப்பு + பூ + துறை) கருப்பூந்துறை. இதுவே பின்னர் மருவி கருப்பன்துறையாகிவிட்டது. மேற்கு நோக்கி அருளும் சிவனை வணங்கினால் ஆயிரம் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிட்டும் என்பார்கள். தாமிரபரணி தெற்கிலிருந்து வடக்கு பார்த்து ஓடுவதால் இந்த இடமும் புண்ணியமானது. அத்தகைய தாமிரபரணி கரையில் அமர்ந்து மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவனே அக்னீஸ்வரர் ஆவார். சிவபெருமானை பார்வதி தேவியார் தன் தந்தை தட்சனின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் தட்சன் கோபமடைந்தான். சிவனை மதிக்காமல், அவருக்கு அழைப்பு விடுக்காமல் மிகப்பெரிய யாகம் நடத்தினான். இதனால் தட்சன் மீது கோபம் கொண்டார், சிவபெருமான். தட்சனின் யாகத்தில் கலந்துகொண்ட அக்னி தேவனும் அவரது வாகனமாகிய ஆடும் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தட்சனுக்கும் சாபம் கொடுத்தார் ஈசன். ஆனாலும் சிவபெருமானுக்குக் கோபம் தணியவில்லை. அக்னிபோல் தகதகத்தார். அதன் பின்னர் தாமிரபரணி கரையில் வந்தமர்ந்து விட்டார். உக்கிரம் என்றால் அப்படியொரு உக்கிரம்.

அவரது அக்னி நாக்குகள் தன்னுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தி கருங்காடு வரை சென்றன. இதனால் மேலநத்தத்தை அடுத்த கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் வரை வயல் பகுதி கள் யாவும் தீக்கிரையாகி கருகியது. அதோடு மட்டுமல்லாமல் நெல்லுக்கு வேலியிட்ட திருநெல்வேலி பகுதியிலுள்ள வயலெல்லாம் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது. எனவே, உக்கிரத்தினை கட்டுப்படுத்த கருங்காடு கிராமத்தில் சித்தர்கள், முனிவர்கள் எல்லோரும் சேர்ந்து அக்னியை பரவாமல் தடுக்க சிவனை பிரதிஷ்டை செய்தார்கள். எனவே, சிவன் அங்கு “பரவா எல்லை நாதர்’’ என்றழைக்கப்பட்டார்.

தற்போதும் கருங்காட்டில் பரவா எல்லைநாதர் ஆலயம் உள்ளது. ஆனாலும், ஈசனின் உக்கிரமான தவத்தால் வயல் அழிந்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் உணவின்றி தவித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் புழுங்கினர். அனைவரும் ஒன்று திரண்டு அத்ரி மலையில் தவமியற்றிக் கொண்டிருந்த கோரக்க மகரிஷியிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அக்னீஸ்வரராக இருப்பதைக் கண்டு தனது ஞானதிருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரத்தின் காரணத்தை அறிந்தார். உடனடியாக அவரை சாந்தப்படுத்துவதற்காக நேர் எதிரே கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்.

அவர்தான் ‘அழியாபதி ஈஸ்வரர்.’ சித்தர்கள் அனைவரும் பௌர்ணமி அன்று ஒன்று சேர்ந்து அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடத்தி அக்னீஸ்வரரை சாந்தமாக்கினர். அதன்பின் அக்னீஸ்வரர் அனைவருக்கும் நன்மை தரும் தெய்வமாக மாறினார். பகவானிடம் சாபம் பெற்ற அக்னிதேவன் இங்கு வந்து தவமியற்றினார். அதனால்தான் நந்திபகவான் அக்னி தேவனின் வாகனமான ஆட்டுத் தலையுடன் காட்சியளிக்கிறார். அதன் பின் இங்கு வந்த தட்சன் தன் சாபம் போக்க வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் படைத்து அக்னீஸ்வரருக்குப் பூஜை செய்தார்.

மகாதேவனும் சாந்தமடைந்து அனைவரையும் காக்கும் தெய்வமாக மாறினார். இந்தக் கோயில் நல்ல செழிப்பான வயல்வெளிகளுக்கு மத்தியில் மேற்கு நோக்கி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. அக்னீஸ்வரர் கர்ப்ப கிரகத்திற்குள் ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கிறார். தானே முளைத்த மூர்த்தி. அவருக்கு நேராக நந்தியம் பெருமான் ஆட்டுத் தலையுடன் அக்னீஸ்வரரை தரிசித்தவாறு உள்ளார். அக்னீஸ்வரரின் வாகனமான ஆட்டுத் தலையுடன் இவர் வீற்றிருப்பது பெரிய விசேஷமாகும்.

சந்நதிக்குள் நுழைந்ததும் வலதுபுறம் பிரணவ, அகோர, வஸ்ய என மூன்று கணபதிகள் வீற்றியிருக்கின்றனர். இவர்கள் மூவரையும் வணங்கி நின்றால் நமக்கு வசிய சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனருகேயே மேல்பகுதியில் அனுமன் ராவணனின் சபையில் தன்னுடைய வாலையே சிம்மாசனமாக அமைத்து அதன் மேல் அமர்ந்த காட்சியைக் காணலாம். இடதுபுறம் சூரியன், அதிகார நந்தி ஆகியோர் உள்ளனர். அதனையடுத்து சந்திரன், வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் நவகிரகங்கள், பைரவர் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. மற்ற கோயில்களில் தட்சிணாமூர்த்தியின் அருகே நான்கு பேர் அமர்ந்திருப்பர். ஆனால், இங்கோ ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இது மிகவும் விசேஷமானது. அருகிலேயே சந்தனக் கல் உள்ளது. ஒருகாலத்தில் இந்த கல்லில்தான் சந்தனத்தை அரைத்து ஈசனின் அக்னி தணிய பூசுவார்கள்; அவரைக் குளிர வைப்பார்கள். சுவாமிக்கு இடது புறத்தில் கோமதி அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். அம்பாளும் தானே உருவான தெய்வம்.

சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே கோமதி அம்பாள் சிலை இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அம்மனுக்கு ஆடிப் பூர வளைகாப்பு மிகவும் பிரபலமானது. இங்கு வளைகாப்பு நடத்தி குழந்தைப் பேறு பெறுகிறார்கள் பக்தர்கள். மேலும், சங்கரநாராயணனின் காட்சியைக் காண ஆடித் தபசு அன்று அம்மனுக்கு விழாவும் உண்டு. இத்தல தீர்த்தமாக தாமிரபரணியின் அக்னி தீர்த்தம் விளங்குகிறது. இந்த தீர்த்தத்தில் ஒருவர் தெற்கு நோக்கி முழ்கி எழுந்தால் அவர்களின் பாவமெல்லாம் பொசுங்கி விடும்.

ஒருவர் தனது தந்தையின் அஸ்தியை கலசத்தில் எடுத்துக்கொண்டு புண்ணிய தீர்த்தம் தேடி அலைந்துள்ளார். இவர் காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புண்ணிய திருத்தலங்களில் சென்று அஸ்தியை கரைத்தார். ஆனால், எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆனால், தாமிரபரணியிலுள்ள கருப்பன்துறையில் கரைத்தபோது வெண்மையான அஸ்தி கருமை நிறமானது. குறுக்குத்துறைக்கு வந்தபோது அந்த அஸ்தி குருத்து விட்டது. சிந்து பூந்துறையில் கரைத்த போது, மலர்ந்து மலர்களாகி விட்டதாம். ஆகவே, முக்கிய தீர்த்தக் கட்டங்களாக இந்த மூன்றும் விளங்குகின்றன.

இந்தக் கோயிலில் எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக நடக்கின்றன. மார்கழி திருவாதிரை காலங்களில் சப்பர புறப்பாடு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் சப்பரத்தில் வரும் சிவனை தரையில் விழுந்து தரிசித்துப்பது கண்கொள்ளா காட்சியாகும். இங்கு நடைபெறும் பிரதோஷம் மிகச்சிறப்பான நிகழ்ச்சி. பிரதோஷ காலங்களில் இங்கு வந்து வணங்கினால் தீராத வழக்குகள் உடனே தீர்ந்து விடும்.

குழந்தை வரம் வேண்டி வருவோர் அக்னீஸ்வரருக்கும், கோமதி அம்பாளுக்கும் 21 வெள்ளிக்கிழமைகள் விளக்கேற்றி வேண்டி வர அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆலயத் தொடர்புக்கு: 9698858027. நெல்லை டவுண் - மேலப்பாளையம் சாலையில் 4 கி.மீ. தொலைவிலும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum