Top posting users this month
No user |
பிரச்னைகள் தீர்க்கும் பிரத்தியங்கரா தேவி
Page 1 of 1

மகா சக்தி கொண்ட தெய்வமாக பிரத்தியங்கரா தேவி திகழ்கிறாள். இவருக்காக புதுவை அருகே பிரத்யேக ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புதுவை நகரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. காட்டுப் பகுதியில் பிரமாண்டமாக இந்த ஆலயம் உருவாகி யுள்ளது. ஆலயத்தில் பிரத்தியங்கரா தேவி பாதாள அறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஆலய முகப்பு சிங்க முக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பூமிக்கு அடியில் செல்லும் படியில் இறங்கிச் சென்றால் அங்கு பிரத்தியங்கரா தேவி வீற்றிருக்கிறாள். இதைத் தவிர ஆலயத்தையொட்டி 72 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக பிரத்தியங்கரா தேவி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் அம்பிகையை தரிசனம் செய்யலாம்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் பல்வேறு பலன்களை பிரத்தியங்கரா தேவி அருள்கிறாள். மேலும் 64 வகை திருஷ்டிகள் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது தவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை அடுத்த தேய்பிறை அஷ்டமியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரத்தியங்கரா யாகம் என்ற சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் தீராத பிரச்னைகளும் தீரும். மனத்தெளிவு ஏற்படும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் குணமாகும். விரைவில் திருமணம் நிகழும். புத்திர பாக்கியம் கிட்டும், வியாபார தடைகள் நீங்கும். பில்லி சூனியம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கைவிட்டு போன சொத்துகள் திரும்ப கிடைக்கும் என்று பலவகை பலன்களை அருள்கிறாள் பிரத்தியங்கரா தேவி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum