Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீராத நோய்களை தீர்க்கும் வீரராகவ பெருமாள்

Go down

தீராத நோய்களை தீர்க்கும் வீரராகவ பெருமாள் Empty தீராத நோய்களை தீர்க்கும் வீரராகவ பெருமாள்

Post by oviya Thu Apr 16, 2015 3:27 pm

108 திவ்ய தேசங்களில் 60வது திவ்ய தேசமாக திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. ஆறுகால பூஜைகள் இன்றும் இங்கு நடைபெறுகிறது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் உள்ள இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர இங்கு ஏராளமானோர் வந்து வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

மேல் வஸ்திரம் வாங்கி பெருமாளுக்கு செலுத்துவது மிகவும் விசேஷமானது. இது கோயில் அலுவலகத்தில் கிடைக்கும். உருவ தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டு புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இங்குள்ள குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கின்றனர். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

பாவங்கள் விலகும் குளம்:

தொண்டை மண்டலத்தில் முக்கிய திவ்ய தேசமான இக்கோயில் குளம் (தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இதில் குளித்தால் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். தை மாதத்தில் தனது பூஜைகளை முடித்து விட்டு, ஆகாரத்துக்காக மாவை சாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, ஒரு பங்கை கொடுக்க இருந்தார். அப்போது, வயதான ஒரு அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். ஆனால், பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் அவர் கேட்க, முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியை தந்தார். இதையடுத்து, முனிவர் அன்று முழுவதும் உபவாசம் இருந்து, அடுத்த நாள் முதல் மீண்டும் தவம் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து மறுபடியும் நிவேதனம் செய்த பின், விருந்தினருக்காக காத்திருந்தார்.

அதேபோல், அதே முதியவர் வந்து மாவு கேட்க முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த முதியவர் 'எவ்வுள்' என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி 'இவ்விடம் படுத்துக் கொள்ளவும்' என்றார். மறுகணமே அந்த முதியவர் ரூபத்தில் வந்த வீரராகவர் சயன கோலத்தில் காட்சி தந்து, முனிவரிடம் 'என்ன வரம் வேண்டும் கேள்' என கூற, இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்டார். பகவானும் அவ்வாறே இங்கு எழுந்தருளியதாக கூறப்படுகிறது.

முக்கிய விழாக்கள்:

தை பிரமோற்சவம் 10 நாட்கள், சித்திரை பிரமோற்சவம் 10 நாட்கள், பவித்ர உற்சவம் 7 நாட்கள், இவை தவிர தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்கள், வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் திரள்வது வழக்கம்.

இக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை. மேலும் விவரங்களுக்கு - 2766 0378, 97894 19330 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum