Top posting users this month
No user |
சொல்லி வரம் கொடுக்கும் ஜெனகை மாரியம்மன்
Page 1 of 1
சொல்லி வரம் கொடுக்கும் ஜெனகை மாரியம்மன்
சோழவந்தானின் சிறப்பு இங்குள்ள திருக்கோயில்கள் ஆகும். மதுரையைப்போல இவ்வூரையும் கோயில் நகரம் என அழைக்கின்றனர். திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் தான். இதில் பிரசித்தி பெற்றது ஜெனகை மாரியம்மன் கோயில். தமிழகத்திலேயே இக்கோயிலில்தான் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறும். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச்சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள் . அதேபோல இங்குள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலும் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது.
இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மதுரைக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். பழமை வாய்ந்த பிரளய நாதர் (சிவன்) கோயில், சனீஸ்வர பகவான் கோயில் மற்றும் ஐயப்பன், அருணாச்சலேஸ்வரர் , இரட்டை விநாயகர், பத்ர காளியம்மன், உச்சிமா காளியம்மன், இருளப்பசாமி, வெள்ளை பிள்ளையார், பச்சை காளியம்மன் உள்ளிட்ட பல கோயில்கள் இந்நகரத்தில் உள்ளன. மேலும், ஊரைச் சுற்றி திருவேடகம் ஏடகநாதர், குருவித்துறை சித்திராத வல்லப பெருமாள், குருபகவான், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்கள் மிகவும் பிரபலமான கோயில்கள் ஆகும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum