Top posting users this month
No user |
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் உங்கள் பார்வைக்கு
Page 1 of 1
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் உங்கள் பார்வைக்கு
இந்து தர்மம் என்பது வெறும் இறைவழிபாடு அல்ல. அது ஒரு வாழும் வகையை எடுத்துச்சொல்லும் தர்மம். எப்படி வாழ வேண்டும் என்பதற்காக உலக மக்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு வழிகாட்டி. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் தான் இந்து தர்மம். தத்துவங்கள் மூலமாக மனிதர்களை நல்வழிப்படுத்துவதே இதன் முக்கிய சாரமாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆதி சங்கரர் எழுதிய இந்த பாடலை அர்த்தத்துடன் கேட்டாலே அவை உங்களுக்கு நன்றாக விளங்கும். உங்களுக்காக ஆங்கில வரிகளுடன் இந்த பாடல்!
ஆதி சங்கரர் :
பிறப்பு கி.பி: 788
சிவனடி சேர்தல்: 820
இதோ தமிழாக்கம்!
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
காலம் கடந்து மரணம் நெருங்கும் தருவாயில் இருக்கையில் அவனை நினைத்திரு! வாழ்க்கையின் சூத்திரங்கள் உன்னைக்காப்பாற்றாது.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
பெரும் செல்வம் சேர்க்கும் தாகத்தை விட்டு விடு. அர்த்தமற்ற ஆசைகளால் பயனேதும் கிடைக்கப்போவதில்லை.
புனிதமான நல்ல எண்ணங்களின் மீதே உனது சிந்தனையை நிறுத்தி வை! உனது நடவடிக்கைகளில் அதுவே பிரதிபலிக்கும். கடந்த கால கர்மங்களினால் வரப்போகும் விளைவுகளை மகிழ்வுடன் எதிர்கொள்!
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
பொருள் ஈட்டி சேமிக்கும் திறன் எவ்வளவு காலம் இருக்குமோ அதுவரை உன்னைச் சார்ந்தவர்கள் உன்னோடு சேர்ந்திருப்பார்கள்.
உடல் நடுங்கி, ஆரோக்கியம் இல்லாத வயோதிகம் வந்த பின்னால் உன்னை பார்த்துக்கொள்ளவோ, உன்னோடு ஒரு வார்த்தை பேசவோ யாரும் அருகே இருக்கப்போவதில்லை.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
உனது இளமை, செல்வம் மற்றும் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மனிதர்களைப் பற்றி கர்வம் கொள்ளாதே! காலம் ஒரு நொடியில் அவற்றை இல்லாமல் செய்து விடும்.
கற்பனையான உலக மாயையிலுருந்து விடுபட்டு நிரந்த்தரமான உண்மையை அடைய முயற்ச்சி செய்!
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
கோவில்களை தரிசித்து, மரத்தடியில் குடியிருந்து, மரவுரி தரித்து, நிலத்தில் உறங்கிப்பாருங்கள்! உலகப்பொருட்கள் மீதுள்ள பற்றுதல் விட்டுப்போகும்.
சுகங்களின் மீதுள்ள பற்றுதல் நீங்கியவர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைக்காமலா போகும்??!
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
கொஞ்சமேனும் பகவத் கீதையைப் படியுங்கள், ஒரு துளியேனும் கங்கை நீரைப் பருகுங்கள், ஒரு முறையேனும் முராரியை பக்தியுடன் நினையுங்கள்.
அவ்வாறு செய்பவர்களுக்கு யமதர்மரிடம் போராடும் நிலை வரவே வராது.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
மீண்டும் பிறந்து, மீண்டும் இறந்து, மீண்டும் பிறப்போம் ஒரு தாயின் கருவறையில்.இந்த சம்சார சுழற்சியைக் கடந்து போவது மிகவும் கடினம்.
ஓ முராரி! உனது எல்லையற்ற கருனையினால் என்னைக் காப்பாற்று.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
தொடர்ந்து கீதையை பாராயனம் செய்தலும், தொடர்ந்து பகவான் விஷ்னுவை மனதில் தியானித்து , அவனது ஆயிரமாயிரம் அழகை பாடுவதே இன்பம் சேர்க்கும்.
வறுமையில் வாடுபவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் செல்வங்களை பகிர்ந்து கொடுப்பதில் மகிழ்ச்சி கொண்டு புண்ணியம் தேடுக்கொள்.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
சொத்துக்கள் சுகம் அல்ல, அதனால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. இது எல்லா நேரங்களிலும் நமக்கு பிரதிபலிக்கும்
பெரும் பணக்காரன் தனது சொந்த பிள்ளைக்கு பயந்து வாழும் சூழல் உண்டாகும். இது தான் பணத்தின் நிலை உலகெங்கிலும்.
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
சரியான குருவின் வழி நடக்க முயற்சி செய்தால், சம்சார வாழ்க்கையிலிருந்து விடுபடலாம்.
குருவைச் சரணடைந்து கட்டுப்பாடுடன் மனதை நல்லவழியில் செலுத்தி வாழ்ந்தால், கடவுள் உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக குடியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே...
கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum