Top posting users this month
No user |
பச்சை பட்டினி விரதம்
Page 1 of 1
பச்சை பட்டினி விரதம்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டும் வரத்தை சமயபுரம் மாரியம்மன் அளிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அதனால் இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாசி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கும்.
பூச்சொரிதல் விழா தொடங்கிய நாளன்று மாரியம்மன் உலக நன்மைக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்குவார்கள். அம்மனின் பக்தர்களும் மஞ்சள் ஆடையும், கழுத்தில் மாலையும் அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரி பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர், பழ வகைகளே படையலாக வைத்து படைக்கப்படும்.
அம்மனின் பக்தர்களும் விரத உணவை உண்பார்கள். இந்த விரதம் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் நடக்கும் போது அம்மனுக்கு வழக்கமான தளிகை நைவேத்தியமாக படைக்கப்படும். அம்மன் விரதத்தை நிறைவு செய்ததையடுத்து அம்மனின் பக்தர்களும் நேற்று கொடியேற்றம் நடந்ததும் விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum