Top posting users this month
No user |
வறுத்தலைவிளானில் பாடசாலையும் கண்டுபிடிப்பு!
Page 1 of 1

யாழ்.வலி,வடக்கு வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையை 27 வருடங்களுக்கு பின்னர் 2 மணி நேர தேடுதல் வேட்டையில் இறங்கிய மக்கள் அடர்ந்து வளர்ந்த பற்றைகளுக்கு மத்தியிலிருந்து இடிந்த நிலையில் பாடசாலையை நேற்றைய தினம் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 11ம் திகதி வறுத்தலைவிளான் பகுதி மீள்குடியேற்றத்திற்காக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்கள் பகுதிகளை துப்புரவு செய்து வருகின்றனர். எனினும் 27 வருடங்கள் மக்கள் பயன்படுத்தாத பகுதியாகையால் அந்தப் பகுதி முழுவதும் காடுகளாக மாறியிருக்கின்றன.
இந்நிலையில் வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையை மக்கள் கடந்த 2 நாட்களாக தேடியுள்ளனர். எனினும் பாடசாலையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நேற்று வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் கிராமசேவகர்களுடன் இணைந்து மக்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
காலை 11மணிக்கு பாடசாலையைத் தேடும் பணியில் இறங்கிய மக்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கடுமையான பற்றைகள், முட்கம்பிகள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை,கடந்து சென்றும் பாடசாலையை காணமுடியவில்லை, பாடசாலைக்கான வீதியைக் கூட காணமுடியவில்லை.
பின்னர் அந்தப் பகுதியை சேர்ந்த வயதான பெண்மணிகள் இருவர் மேலதிகமாக அழைக்கப்பட்டு இந்த இடத்திலேயே பாதை இருந்தது என்பதை ஒரு கணிப்பீட்டின் அடிப்படையில்,வைத்துக் கொண்டு தேடிய நிலையில் சுமார் 2 மணிநேரம் தேடுதல் நடத்திய பின்னர் ஒருவாறாக அடர்ந்து வளர்ந்த பற்றைகளுக்கு நடுவில் முழுவதுமாக இடிந்த நிலையில் ஒரு கட்டிடத்தை மக்கள் கண்டுபிடித்தனர்.
அந்தக் கட்டிடம் பாடசாலையாக இருக்குமோ? என தேடிய நிலையில் கட்டிடத்தின் எஞ்சியிருந்த ஒரு பாகத்தில் கரும்பலகை இருப்பதைக் கண்ட மக்கள் அது பாடசாலைக் கட்டிடமே என உறுதிப்படுத்திக் கொண்டு பாடசாலையை கண்டுபிடித்து பின்னர் பாடசாலை அயலில் இருந்த வீடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு இடம்பெற்ற போது மக்கள் மகிழ்ச்சி மற்றும்,சோகத்தில் ஆழ்ந்திருந்ததை காணமுடிந்தது. காரணம் பாடசாலையை தேடியவர்களில் பலர் அந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள், மற்றும் கற்பித்தவர்கள், கற்பித்தவர்களின் உறவினர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்படி பாடசாலை வறுத்தலை விளான் மற்றும் கட்டுவன்,பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான ஆரம்ப பாடசாலையாகும் இடப்பெயர்வின் பின்னர் இந்தப் பாடசாலை தற்போது மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum