Top posting users this month
No user |
யாழில் குடிநீர் மாசடைதல் தொடர்பில் தீர்வு காண்பதற்கான கூட்டம் மூடிய அறைக்குள்..
Page 1 of 1

யாழ்.குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தீர்வு காண்பதற்கான கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படாமல் மூடிய அறைக்குள் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி கூட்டத்தில் வடமாகாண முதலமச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அமைச்சர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
குடாநாட்டு நிலத்தடி நீரில் உயிர் ஆபத்தை உருவாக்க கூடிய btex ஹைதறோ காபன் இல்லை. என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. எனினும் நீரில் பல்வேறு விதமான மாசுக்கள் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிபுணர்குழு அறிக்கை இம்மாதம் வெளியாகும் வரையில் பொறுமையாக இருக்குமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
மேலதிகமாக வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மேலதிகமாக நிபுணர்கள் சிலரை இணைத்துக் கொள்வது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றோம்.
இதேபோன்று நிபுணர் குழுவிடம் நாங்கள் மேலும் ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அதாவது வடமாகாணத்திலுள்ள நீர் வளங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதன் மூலம் எதிர்காலத்தில் எமது நீர் தேவைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும். என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum