Top posting users this month
No user |
அஸ்கிரிய பீடாதிபதி போன்று ஏனைய மதத் தலைவர்களும் கௌரவிக்கப்படுவது அவசியம்!
Page 1 of 1

அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரஹித்த தேரர் தேகவியோகம் அடைந்தார் என்ற செய்தியோடு இன்றைய தினம் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நடப்பதற்கு ஏற்பாடாகியுள்ளன.
அதேநேரம் அவரின் மறைவையயாட்டி இன்றைய நாள் தேசிய துக்க தினமாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதத் தலைவர் ஒருவரின் மறைவுக்கு அரசு வழங்குகின்ற மரியாதையாக தேசிய துக்க தினத்தை கொள்ள முடியும். எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட, அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவிற்கான தேசிய துக்கதினம் என்பதை பெளத்த மதமும் சிங்கள மக்களும் தவிர்ந்த, ஏனைய மதத்தவர்களும் இனத்தவர்களும் எப்படிப் பார்க்கிறார்கள் என்றறிவது அவசியம்.
அவ்வாறானதொரு பார்வையில் கடந்த காலத்தில் எங்கள் மதத்தலைவர்கள் மறைந்த போதெல்லாம், இப்படியானதொரு துக்கதின அறிவிப்புகள் அரசினால் விடப்படவில்லை. சமயத்தலைவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால் அது எல்லா மதங்களுக்கும் பொருந்துவதாக இருக்கவேண்டும்.
இதை விடுத்து அரசாள்பவர்கள் சார்ந்த சமயம் என்பதால் பெளத்த மதத்திற்கு விசேட ஏற்பாடுகள் என்ற நிலைமை இந்த நாட்டில் தொடர்வது அவ்வளவு நல்லதல்ல.
அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவுக்கு தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பது தேவையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இந்த நாட்டில் பின்பற்றப்படுகின்ற ஏனைய மதங்களுக்கும் அவை சார்ந்த மதத் தலைவர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் இலங்கை என்ற நாட்டில் நாம் அனைவரும் சமம் என்ற கருத்து நிலை ஏற்படுவதுடன் அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரஹித்த தேரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இன்றைய நாளில் இலங்கை அரசு தேசிய துக்கதினமாக அறிவித்ததற்குள் இருக்கக்கூடிய தாற்பரியம் பிற சமயத்தவர்களாலும் உணரப்படும்.
தேசிய துக்கதினம் என்பது நாடு முழுமைக்குமானது. தேசிய துக்கதினத்தன்று தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன் நாட்டில் நடைபெற இருந்த அத்தனை நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்படும்.
எனவே, தேசிய துக்கதினம் என்பது நாட்டில் உள்ள சகல மக்களினதும் நாளாந்த நடவடிக்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகும்.
ஆக, பெளத்த மதத்தலைவர் ஒருவரின் மறைவுக்காக அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய துக்கதினம் என்பதை ஏனைய மதத்தலைவர்களும் அனுஷ்டிப்பதென்பதற்குள் இருக்கக் கூடிய ஒற்றுமை எல்லா சமயங்களையும் சமத்துவமாக நோக்குவதாகும்.
இல்லையேல் நாங்கள் அறிவித்தால் நீங்கள் அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும் என்பதாக நிலைமை முடியும். இது சர்வாதிகாரமாகி விடும்.
ஆகையால் மறைந்த அஸ்கிரிய பீடாதிபதிக்கான தேசிய துக்கதின அனுஷ்டிப்போடு எல்லா சமயங்களையும் சமத்துவமாக மதித்தல் என்ற உயரிய கொள்கையை அரசு பிரகடனப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தும் போது தான் அஸ்கிரிய பீடாதிபதிக்கு அரசு வழங்கும் தேசிய துக்கதினம் என்ற உயரிய இறுதி மரியாதை கெளரவம் பெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum