Top posting users this month
No user |
ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூவர் விலகல்
Page 1 of 1

கடந்த ஐந்து வருடங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூன்று பேர் விலகியுள்ளனர்.
ஏற்கனவே இந்தக் குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியாசத் மற்றும் அனில் குணரட்ன ஆகியோர் அங்கம் வகித்தனர். மூன்றாவதாக இளைப்பாறிய கணக்காய்வாளர் நாயகம் ஏ சி மாயாதுன்ன நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இவர்கள் மூவரும் குழுவில் இருந்து விலகியுள்ளனர். தனிப்பட்ட காரணங்களே இதற்காக கூறப்பட்டுள்ளன.
விலகியுள்ள நீதியரசர்களுக்கு பதிலாக மேல்நீதிமன்ற நீதிபதிகளான பீரிதி பத்மன் சூரசேன, டி ஏ மெண்டிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைப்பாறிய கணக்காய்வாளர் நாயகத்துக்கு பதிலாக இளைப்பாற்றிய மற்றும் ஒரு கணக்காய்வாளர் நாயகம் பி.ஏ பிரேமதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இரண்டு உறுப்பினர்களான மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, இளைப்பாறிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஐயாத்துரை ஞானதாசன் ஆகியோர் தொடர்;ந்தும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழுவுக்கு தற்போது வரை 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum