Top posting users this month
No user |
Similar topics
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!
Page 1 of 1

கடவுள் விரும்பினால் அன்றி அற்பப் புல் கூட அணுவளவும் அசைய முடியாது. எல்லாம் அவரின் திருவுள்ளப்படியே உலகில் நடக்கிறது.
* போதும் என்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறு இல்லை.
* துன்பம் என்பது தொடர் கதை அல்ல. அது பாலத்தைக் கடந்து செல்லும் நீரைப் போல, நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
* நம்மிடம் தனிப்பட்ட முறையில் எந்த சக்தியும் கிடையாது. ஆனால், கடவுளின் அருள் இருந்தால், அரிய பெரிய செயல்களைக் கூட எளிதாக சாதிக்க முடியும்.
* கடவுளின் திருவடியில் முழுவதுமாக உன்னை நீ அடைக்கலமாக கொடுத்து விட்டால், நம்மை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
* துன்பம் நேரும் சமயத்தில் கடவுளிடம் சென்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். ""இறைவா! எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!'' என்று வாய் விட்டுச் சொல்லுங்கள்.
* தேவையானது உண்மையான அன்பு ஒன்றே. அன்பின்றி கடவுளை யாராலும் அறிய முடியாது. சாதிக்க முடியாததையும் பக்தி மூலம் சாதிக்க முடியும்.
* எப்போதும் கடமையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால், ஆழ்மனதில் கடவுளின் திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டே இருப்பது என்னும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தால், நமது பயணம் இனிமையாகத் தொடரும்.
* ஏரியில் நீந்தும் வாத்து, ஒரு உதறு உதறியதும் உடலில் நீர் சிதறிப் போவது போல, உலக வாழ்வில் இருந்தாலும், அதை உதறித் தள்ள தயாராக இருங்கள்.
* நல்ல மனம் படைத்தவர்கள் உலகில் காணும் அனைத்தையும் நன்மை தரும் கண்ணோட்டத்துடனேயே அணுகுவார்கள்.
* கடமையின் சுமை எவ்வளவு அழுத்தினாலும், கடவுளை வழிபடத் தவறாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தை கடவுளுக்காக ஒதுக்குங்கள்.
*மணிக்கணக்காக வழிபாடு செய்வதை விட, முழு ஈடுபாட்டுடன் இரண்டு நிமிடம் செய்யும் பிரார்த்தனையே போதுமானதும் மேலானதும் ஆகும்.
* பணம் யாரையும் கவர்ந்திழுத்து விடும் ஆற்றல் படைத்தது. ஆனால், பணத்தால் மனித மனம் கறையுடையதாக மாறி விடும்.
* எதைச் சாப்பிடுவதாக இருந்தா<லும், கடவுளுக்கு படைத்து விட்டுச் சாப்பிடுங்கள். இதனால், மனம் சுத்தமாகும்.
* பெற்ற தாய்க்குச் சேவை செய்ய வேண்டியது அனைவருடைய மேலான கடமை. அன்னையின் அன்புக்கு ஈடு இணை கிடையாது.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். சுய கவுரவம் இல்லாத பெண்ணைப் பெண் என்றே குறிப்பிட முடியாது.
*ஆன்மிகத்தில் சாதனை நிகழ்த்த விரும்பினாலும், பணம் சம்பாதிக்க விரும்பினாலும் அதற்கு இளமைக்காலமே தகுதி வாய்ந்தது.
* பிறர் மீது குற்றம் சுமத்துவது நல்லதல்ல. பிறர்குற்றங்களைக் காணத் தொடங்கினால், பின்னாளில் அதுவே நம் இயல்பாகி விடும்.
* தவறுவது மனித இயல்பு தான் என்றாலும், அது மீண்டும் வராமல் தடுத்து சரிப்படுத்த வேண்டியது ஒருவனுடைய கடமை.
* அசைக்க முடியாத மன உறுதி, கடவுளிடத்தில் நம்பிக்கை இந்த இரண்டும் அடிப்படை பண்புகள். இவை இருந்து விட்டால் எல்லாமே இருந்த மாதிரி தான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum