Top posting users this month
No user |
Similar topics
நமக்கு மேலே ஒருவன் அவன் நாலும் தெரிந்த தலைவன்
Page 1 of 1

* நீ வழிபடும் கடவுளைத் தவிர, வேறு எதனிடமும் மனம் ஈடுபடாத விதத்தில் பார்த்துக் கொள்வதே பெரிய சாதனை.
* கடவுளைத் தேடி எங்கும் ஓட வேண்டாம். முதலில் உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய். நிச்சயம் கடவுளே உன்னை நாடி வந்து விடுவார்.
* உலக நடப்பையே ஒரு நாடகமாக பார்த்து வா. உன்னிடத்திலுள்ள பேதம் அனைத்தும் நீங்கி விடும். அனைவரும் நல்லவர்களாகத் தோன்ற ஆரம்பிப்பார்கள்.
* பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்யக் கூடாது. மனசாட்சியின் படி தர்மத்தில் ஈடுபடுவதே மன அமைதிக்கான வழி.
* மனதில் சஞ்சலம் கொண்ட மனிதன் எப்போதும் வேதனையில் சிக்கித் தவிக்க நேரிடும்.
* யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு மறைவில் இருந்த படி பாவத்தைச் செய்யாதே. கடவுள் எப்போதும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
* மனத்தூய்மை மிக்க நல்லவர்களிடம் நட்பு கொள். அதனால் அருட்சக்தியை எளிதாக உணரும்
பாக்கியம் பெறுவாய்.
* கடவுள் என்னும் சத்தியத்தை நம்பி இருப்பவன் இருக்குமிடமே சொர்க்கமாகி விடும்.
* கடமையைச் செய்ய மறுக்காதே. பொறுப்பை வெறுப்பது கடவுளை வெறுப்பதற்குச் சமம்.
* வெற்றி பெற வேண்டுமானால், யார் மீதும் கோபமோ, பொறாமையோ கொள்வது கூடாது.
* உன்னை நீயே அறிந்து கொள்ள முற்படு.இதனால், துன்பம் அகலுவதோடு எல்லா இன்பமும் உண்டாகும்.
* மனத்தூய்மை, அன்பு, நேர்மை, பொறுமை என எல்லா நல்லெண்ணங்களும் மனிதனுக்கு மிக அவசியமானவை.
* எப்போதும் முழுமனதுடன் பணியாற்றிக் கொண்டிரு. சோம்பேறித்தனத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து விடு.
* உலகில் உனக்குத் துணையாக இருப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே. அவரைத் தவிர வேறு யாரும் உனக்கில்லை. அவன் எல்லாம் அறிந்தவன். நமக்கு மேலே இருப்பவன் அவன் மட்டுமே. அவனை உறுதியாக நம்பினால் நிச்சயம் நன்மை உண்டாகும்.
* பெரும் பகைவர்களான மண், பெண், பொன், புகழ் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கடமையை மட்டும் செய்து கொண்டிரு.
* யாருக்கும் மனதறிந்து தீங்கு நினைக்காதே. செய்யும் துரோகம் உன்னை நீயே கெடுத்துக் கொள்ளும் செயல் தான்.
* பணிவுடன் அனைவரையும் வணங்கு. சிரத்தையும், ஆர்வமும் கொண்டவனாக இரு. விசுவாசம் மனதில் நிலைத்திருக்கட்டும். முன்னோரின் வார்த்தைகளை பூரணமாக நம்பி விடு.
* முட்டாள்தனமாக உன்னை நீயே பெரியவனாக எண்ணிக் கொண்டு கர்வப்பட வேண்டாம். எத்தனையோ பணக்காரர்கள், மேதாவிகள் பூமியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே.
* விருப்பும், வெறுப்பும் உன்னைக் கெடுக்கும் எதிரிகள் என்பதை மறந்து விடாதே. ஞானிகள் ஒருபோதும் விருப்பு வெறுப்பு கொள்ள மாட்டார்கள்.
* தங்கத்தைத் தேடிஅலையாதே. சத்தியம், தர்மம் போன்ற உயர்பண்புகளை வளர்த்துக் கொண்டு மனதை மாசற்ற தங்கமாக ஆக்கிக் கொள். அரிய மனிதவாழ்வு மூலம் சாதனை படைத்து விடு.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum