Top posting users this month
No user |
Similar topics
அம்மா.. அம்மா... நீ எங்க அம்மா!... உன்னை விட்டா எனக்கு யாரு அம்மா
Page 1 of 1

கல்லில் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறீர்கள். அதுபோல், நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமும் தெய்வம் இருக்கிறது என்று நம்புங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண் உடையவன்.
* அம்பிகையைத் தாயாக வழிபடுகிறோம். அவளைப் போலவே, நம்முடைய அம்மா, சகோதரி, மனைவி என எல்லா பெண்களையும் தாயாகக் காண வேண்டும். தாயே நமக்கு சகலமுமாக இருக்கிறாள்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி..அதில் தவறில்லை. ஆனால், பிறரை ஏமாற்றாமல் வாழ்ந்தாலே தெய்வத்தின் அருளைப் பூரணமாகப் பெறலாம்.
* தெய்வம் விட்ட வழி நல்வழி என்று பாரத்தைக் கடவுள் மீது வைத்து விட்டு வாழ்வு நடத்துபவன் தெய்வத்தன்மை அடைந்து விடுவான்.
* உலகில் மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருந்து கொண்டு தான் இருக்கும்.
* எல்லோரும் அநியாயம் செய்து கொண்டிருக்க, நான் மட்டும் ஏன் நியாயவழியில் நடக்க வேண்டும் என்று விபரீதமாக யோசிப்பது கூடாது.
* நடந்தது எல்லாம் போகட்டும். இனி நடக்க வேண்டியதை யோசித்து நன்மையாற்றுங்கள்.
* சமூகத்தில் ஒரே ஒருவன் தர்மத்தைப் பின்பற்றினால் கூட, அவனைப் பார்த்து பத்துபேர் திருந்தி நல்வழியில் நடக்க முயல்வார்கள்.
* தியானத்தின் சக்தியை யாரும் எளிதாக மதிப்பிட வேண்டாம். விரும்பியதை எல்லாம் அடைவதற்கு தியானம் நல்ல சாதனமாக இருக்கிறது.
* புதரில் பிடித்த தீ போல, நம் மனதிலுள்ள கவலை,பயம் போன்ற எண்ணத்தை எரிக்கும் ஜோதியே தியானம்.
* அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, வீரம், தீரம் போன்ற நல்ல எண்ணங்கள் எப்போதும் மனதில் நிரம்பி இருக்கட்டும்.
* ஊற்றில் இருந்து நல்ல நீர் ஊறுவது போல, தியானம் செய்வதன் மூலம் மனதில் தெளிந்த அறிவும், தீரமும், சக்தியும் மென்மேலும் பொங்கி வரும்.
* காலம் பணவிலை உடையது என்பதை நம்மவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. பொழுதை வீணாகக் கழிப்பதால், பணலாபம் கிடைக்காமல் போய் விடுகிறது.
* இன்று செய்ய நினைத்ததை நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது. இதனால், அதைச் செய்யாமல் போய் விட நேரிடலாம்.
* வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருக்கும் செயலில் கூட, சூட்டோடு சூடாக செய்யாமல் போனால், அதற்குத் தகுந்தாற் போல பலனில் குறைவு ஏற்படவே செய்யும்.
* வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறொரு மாதிரியாகவும் இருப்பவர்களின் நட்பை கனவிலும் ஏற்றுக் கொள்வது கூடாது.
* மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் யாரும் இல்லை. மனதிற்குள்ளே பயம், சந்தேகம், சோம்பல் போன்ற பகைவர்கள் மலிந்து கிடக்கிறார்கள்.
* எத்தனை பெரிய ஆபத்துகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அவற்றை நம்பிக்கையால் தகர்த்து வெற்றியை அடைந்து விடலாம்.
* அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவுடைமை. விபத்துக்கள் வரும் போது நடுங்குபவன் மூடனே. அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் பயனில்லை.
* கொள்கை அளவில் மட்டுமே அன்பு இருக்கிறது. அதைச் செயலாக வெளிப்படுத்தினால் மட்டுமே உலகம் முழுமையும் பயன் பெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum