Top posting users this month
No user |
Similar topics
நேரம் நல்ல நேரம்!
Page 1 of 1
நேரம் நல்ல நேரம்!
போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை. பிரச்னை தீரவில்லையே' என்று மனம் வாடுவோருக்கு அருள்புரிய காத்திருக்கிறாள் காலதேவி. மதுரை மாவட்டம், எம்.சுப்புலாபுரம் சிலார்பட்டியில் இவளுக்கு கோயில் உள்ளது. இது இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு: தெய்வம் தன்னை வழிபடுவோருக்கு எல்லாம் கேட்ட வரம் தந்து கொண்டுதான்
இருக்கிறது. ஆனால், நல்ல நேரம் இருந்தால் மட்டுமே ஒருவர் அதைப் பெற முடியும். இல்லாவிட்டால், ஒருவருடைய நேரமே தடுப்புச்சுவராக நின்று பலனைத் தடுக்கிறது. அந்த நிலையில் இருப்போருக்கு அருள்புரிபவளாக விளங்குபவள் காலதேவி. பஞ்சபூதம், நவக்கிரகம், 27 நட்சத்திரம், முப்பத்து முக்கோடி தேவர் என அனைத்தும் இவளின் ஆற்றலுக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டவை. காலச் சக்கரத்தை இயக்கும் தலைவி இவள். இவளின் கடைக்கண் பார்வை பெற்று விட்டால், கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறி விடும். நேரத்தை மாற்றும் கோயில் என்பதால் நேரக்கோயில் என அழைக்கப்படுகிறது. 2006ல் இங்கு காலதேவிக்கு கோயில் கட்டப்பட்டது.
இரவு நேரக் கோயில்: இங்கு எண்கோண வடிவ கருவறை உள்ளது. விமானமும் எண்கோண வடிவில் செங்குத்தாக உள்ளது. காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
காலையில் நடை திறந்து இரவில் சாத்துவது கோயில்களில் வழக்கம். இங்கு சூரியன் மறைந்த பின் மாலையில் தான் நடை திறக்கப்படும். இரவும் முழுவதும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
காலதேவி என்ற பெயரில் வேறெங்கும் கோயில் இல்லாதது தனிச்சிறப்பு. அமாவாசை, பவுர்ணமி நாளில் யாகத்துடன் சிறப்பு பூஜை நடக்கும். மாசி பவுர்ணமி நாளில் வருஷாபிஷேகம் நடக்கும்.
வழிபாட்டு முறை: கோயிலை வலமிருந்து இடமாக 11 முறையும், இடமிருந்து வலமாக 11 முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். அதன்பின், சந்நிதி முன் இருக்கும் காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின் தேவிக்கு விளக்கேற்றி வழிபட்டால் துன்பம் நீங்குவதோடு நல்ல நேரம் வந்து விடும்.
இருப்பிடம்: மதுரை- தென்காசி ரோட்டில் 45 கி.மீ,. தூரத்தில் எம். சுப்புலாபுரம் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் வரும் சிலார்பட்டி கிராமத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: மாலை 6.00- காலை 6.00.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum