Top posting users this month
No user |
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் "பம்மலில்' நீ காணலாம்
Page 1 of 1

சபரிமலையில் இருப்பது போலவே, சென்னை பம்மல் சங்கரா நகரிலுள்ள தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்ப சுவாமி வீற்றிருக்கிறார். இங்கு குருவாயூரப்பனுக்கும் சந்நிதி உள்ளது.
தல வரலாறு: கரம்பன் என்ற அசுரனின் மகளான மகிஷி, பிரம்மனை நோக்கி தவம் செய்தாள். சிவன்,விஷ்ணு இருவருக்கும் பிறந்த பிள்ளையைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு நேரக் கூடாது என வரம் பெற்றாள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்காது என்ற தைரியத்தில், அவளது கொடுமை பூமியில் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவளை சம்ஹாரம் செய்ய விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். மோகினிக்கும், சிவனுக்கும் தர்ம சாஸ்தா அவதரித்தார். அவர் மகிஷியை வதம் செய்து சபரிமலையில் தர்மசாஸ்தாவாக கோயில் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில், சென்னை பம்மல் சங்கராநகரில் தர்மசாஸ்தா கோயில் கட்டப்பட்டுள்ளது.
வழிபாட்டு முறை: இக்கோயிலில் தினமும் நித்யபூஜை அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கி, இரவு 8.30க்கு ஹரிவராசனத்துடன் நிறைவு பெறுகிறது. ஹரிவராசனத்தின் போது மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்குகளின் ஒளியில் மூலவரின் அற்புதக் காட்சியை காண்பவர் மனதை சிலிர்க்க வைக்கிறது. சனிக்கிழமையன்று கற்பூர ஜோதி பிரதட்சிணம் செய்யப்படுகிறது. விசேஷ நாட்களில் புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை நெய் அபிஷேகம் நடக்கும். மகரஜோதி நாளில் அருகிலுள்ள பவானி அம்மன் கோயிலில் இருந்து திருவாபரணம் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. திருவாபரணம் சுவாமிக்கு சாத்தப்பட்டு, காந்தமலையில் ஜோதி ஏற்றுவது போல, கோயில் அருகிலுள்ள சிவன்மலையில் மகரஜோதி ஏற்றப்படுகிறது.
கோயில் அமைப்பு: மூலவர் சிலை சபரிமலையில் இருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. கருப்பசாமி, கருப்பாயி அம்மா, பெரிய கருத்தசாமி, விநாயகர், பாலசுப்பிரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. தர்மசாஸ்தாவின் வலப்புறத்தில் குருவாயூரப்பன் சந்நிதி உள்ளது. மாளிகைப்புறத்தம்மன் அஷ்டபுஜ துர்க்கையாக வீற்றிருக்கிறாள். பொதுவாக, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை இங்கு கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. மேற்கு நோக்கிய சிவன், துர்க்கையை நோக்கியபடி மரகதலிங்கமாக வீற்றிருக்கிறார்.
நாகராஜா சந்நிதி: வில்வம், அரசமரம் இணைந்திருக்கும் இடத்தில் நாகராஜா சந்நிதி உள்ளது. நாகராஜா, நாகயட்சி சமேதராக அருள்புரிவது சிறப்பு. கேரள மாநிலம், வைக்கம் அருகிலுள் "நாகம் மொழி மனா' என்னும் இடத்தில் இருந்து ஆவாகனம் செய்து நாகராஜரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவருக்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடக்கும். நாகபஞ்சமியன்று சர்ப்ப பிரீதி, சர்ப்ப பலி, சாந்தி, ஹோமம், புஷ்பாஞ்சலி, "நூரும் பாலும்' வழிபாடு நடக்கிறது. தற்போது கோயிலில் கொடிமரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இருப்பிடம்: சென்னை தாம்பரத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் பம்மல் சங்கரா நகர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum