Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நினைத்தாலே இனிக்கும் (15)

Go down

நினைத்தாலே இனிக்கும் (15)      Empty நினைத்தாலே இனிக்கும் (15)

Post by oviya Sat Apr 11, 2015 2:36 pm

அர்த்த பஞ்சகம் என்றால் என்னென்ன தெரியுமா?
ஜீவாத்மா, பரமாத்மா, <உபாயம், பிரதிபந்தகம், கைங்கர்ய சொரூபம் என்னும் ஐந்துமே அர்த்த பஞ்சகம்.
ஜீவாத்மா என்பது "நாம் யார்' என்பதைப் பற்றிச் சொல்வது. உயிர்களைப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் கடவுளின் தன்மையை விளக்குவது பரமாத்மா. உயிர், கடவுள் இந்த இரண்டிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கடவுளை அடையும் வழியைச் சொல்வது மூன்றாவதான உபாயம். இதில் ஆயிரமாயிரம் வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் பலவித சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. கடவுளை அடைய விடாமல் தடுக்கும் சம்சார பந்தத்தைப் பற்றிச் சொல்வது பிரதி பந்தகம். முக்தி நிலையில் கடவுளை அடைந்த உயிர், நித்யமான இன்பத்தை அடையும். இதற்கு கைங்கர்ய சொரூபம் என்று பெயர். இந்த நிலையை அடைந்தால், உயிர் எல்லை இல்லாத ஆனந்தத்தை
அனுபவித்தபடி இருக்கும்.
ஒரு வீட்டில் பத்து படி அளவுக்கு பால் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே சாப்பிட்டால் ருசி இருக்குமா? அதே பாலை அடுப்பில் ஏற்றி சுண்டக் காய்ச்சுகிறோம் என்று வைத்துக்
கொள்வோம். பாலின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் ஒன்பதே முக்கால்படி பால் வற்றி கால் படியாகி விட்டது என்றால், அந்த பால் எந்தளவு சுவையாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதைத் தான் திரட்டுப்பால் என்பார்கள்.
கண்ணனுக்கு மிகவும் பிடித்த நைவேத்யம் திரட்டுப்பால் தான். இது போல எந்த ஒரு விஷயத்திலும்
திரட்டுப்பால் போல விசேஷமான பகுதி ஒன்று உண்டு. ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் அதில் விபீஷண சரணாகதி, மகாபாரதத்தில் பகவத்கீதை, வேதத்தில் புருஷ சூக்தம், தர்ம சாஸ்திரத்தில் மனுநீதி என்பதெல்லாம் சிறப்பான பகுதிகள். அதுபோல, புராணத்தில் விஷ்ணு புராணம் தான் திரட்டுப்பால் போல
விசேஷமானது ஒருநாள் காலை அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துவிட்டு பராசரர் அமர்ந்திருந்தார். மைத்ரேயர் அவரிடம் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்க வந்தார். எல்லாம் தான் தெரிந்து விட்டதே என்று எண்ணிக் கொண்டு குரு என்பவர் சும்மா இருக்க கூடாதாம்! தனக்குரிய அனுஷ்டானத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். குருவாக இருப்பவர், சீடர்களுக்கு உபதேசிப்பதைத் தானும் அனுஷ்டிப்பவராக இருக்கவேண்டும். அதுவே குரு ஸ்தானத்திற்கு லட்சணம். ஊருக்குத் தான் உபதேசம் என்று வாயளவில் சொல்லிக் கொண்டிருந்தால் அது நாயின்வால் போல ஆகி விடும் என்பார்கள்.
இப்படித் தான் குரு ஒருவர் தன் சீடரிடம், ""உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருந்து, அதற்குத் தகுந்த நடத்தை இல்லாவிட்டால், நாய் வால் போலாகிவிடும்,'' என்று சொல்லி விட்டார்.
உடனே சீடனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
"குருவே! தேவையில்லாத பொருள் எதையும் பெருமாள் உலகில் படைத்ததில்லை என்று அன்றொரு நாள் சொன்னீர்கள்! இப்போதே வெறும் உபதேசம் மட்டும் செய்து விட்டு, அதன்படி நடக்காவிட்டால் குருவின் நிலை, நாய் வால் போலாகி விடும் என்கிறீர்களே?'' என்று கேட்டு விட்டான்.
அதற்கு குரு,""உண்மை தானப்பா! பெருமாள் எதையும் தேவையில்லாமல் படைத்தது இல்லை. பாண்டித்யம் பெற்ற பலர் உலகில் இருப்பார்கள். ஆனால்,உபதேசிப்பதை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.
அவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நாய் வாலைப் பெருமாள் படைத்தார்'' என்று விளக்கம் கொடுத்தார்.
அது சரி! சிங்கம், புலி,பசு எல்லா மிருகத்திற்கும் தானே வால் இருக்கிறது. நாய்க்கு மட்டுமா வால் இருக்கிறது? ஏன் நாய் வாலை மட்டும் சொல்ல வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது அல்லவா! பொதுவாக மர்ம ஸ்தானத்தை மறைப்பது, ஈ, எறும்பால் தொல்லை நேரும் போது அசைத்து விரட்டுவது என்பது வாலின் பயன்பாடு. ஆனால், இந்த இரண்டையுமே நாயால் செய்ய முடிவதில்லை. பெயரளவில் நாய்க்கு வாலுண்டே தவிர, அதனால் பயன் இருப்பதில்லை.
பராசர மகரிஷியின் பக்கத்தில் பணிவுடன் நின்றார் மைத்ரேயர். குருவை அணுகும் சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சாஸ்திரம் குறிப்பிடுகிறது. நேருக்கு நேராக நின்றால் அது குருவுக்குச் சமம் என்பதாகி விடும். குருவின் பின்புறம் நின்றால் அவரின் அருட்பார்வை சீடன் மீது விழாமல் போய் விடும். அதனால், பக்கத்தில் பணிவுடன் நின்று தான் பேச வேண்டும் என்பார்கள்.
மைத்ரேயர் பராசரரை அணுகி, ""இந்த உலகம் எதனால் ஆக்கப்பட்டது? இது எதிலிருந்து தோன்றியது? ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இந்த உலகில் ஏன் உண்டானது? நேற்று என்பது எங்கே போனது? இன்று எங்கே போகிறது? நாளை என்பது என்ன? '' என்று தன் சந்தேகத்தை குருவின் முன் வைத்தார்.
அதற்கான விளக்கம் தர முன்வந்த பராசரர், தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும், மைத்யேர் கேட்ட கேள்விக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.
""விஸ்வாமித்திரரின் தூண்டுதலால், என் தந்தையாகிய சக்திமுனிவரை பிரம்ம ராட்சஷன் ஒருவன் கொன்று விட்டான். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரம்ம ராட்சஷன் மீது எழுந்த கோபத்தால் ராட்சஷ வர்க்கத்தையே அழிக்க முடிவெடுத்து வேள்வி ஒன்றைத் தொடங்கினேன். பரசுராமர் எப்படி தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே அழிக்க துணிந்தாரோ, அதுபோல என் சபதமும் அமைந்தது. அப்போது என்னைக் காண வசிஷ்டரும், புலஸ்தியரும் வந்தனர். ஒருவன் செய்த தவறுக்காக, ஒரு வம்சத்தையே அழிக்கத் துணிவது தர்மம் ஆகாது. ஒருவரைத் தீயவன் என்று முடிவெடுத்து அழிக்கும் அதிகாரம் <உலகில் யாருக்கும் கிடையாது என்று எடுத்துரைத்து வேள்வியைத் தடுத்தனர். நானும் அவர்களின் உபதேசத்தை ஏற்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
<உடனே அவர்கள் "சிறுவனாக இருந்தாலும், பிடிவாதம் கொள்ளாமல் ஏற்றுக் கொண்ட உனக்கு இரு வரங்களைத் தர விரும்புகிறோம். முதல் வரத்தின் பயனாக, பிரம்மம் என்பது எது என்பதை எளிதாக நீ புரிந்து கொள்வாய். இரண்டாவது வரத்தால் பிரம்மத்தின் தன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாக்கியமும் உனக்கு கிட்டும்' என்று வாழ்த்தி விட்டு புறப்பட்டனர்.
அதன் பயனாகவே "மைத்ரேயா! நீயும் இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாய்'' என்று சீடனின் கேள்விக்கு விடையளிக்கத் தொடங்கினார் பராசரர்.
பராசரர் மட்டும் இந்த வரத்தைப் பெற்றதாக எண்ணி விடாதீர்கள். நல்லவர்களால் வழங்கப்படும் எந்த விஷயமும் தனிப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் கிடைப்பது அல்ல..... அதன் பயன் உலகம் முழுமைக்கும் தான். எப்படி என்கிறீர்களா? உங்களுக்கான விடையை கீதாசிரியன் கிருஷ்ணரே பகவத்கீதையில் விளக்குகிறார்.. பொறுத்திருங்கள் சொல்கிறேன்!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum