Top posting users this month
No user |
Similar topics
இதோ! உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது!
Page 1 of 1
இதோ! உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது!
* இன்று உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. பலவித கலாசார, நம்பிக்கைகள் கொண்ட மக்களின் சங்கமமாக விளங்குகிறது. பணியின் காரணமாக மனிதன் உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது. அதற்கேற்ற பரந்த மனப்பான்மை மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
* ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்களே இன்றைய பெற்றோராக இருக்கின்றனர். அதனால், குழந்தைகளின் மனநிலையும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால், அன்பும், கண்டிப்பும் கலந்த நிலையில் அவர்களை நெறிப்படுத்துவதே சரியான வழிமுறை.
* மனிதன் எல்லோருடனும் சகஜமாக நட்பு பாராட்டி பழக வேண்டும். பலரும் கூடி ஒன்றாக வாழும் சமுதாயத்தில் நட்புணர்வு இல்லாவிட்டால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது.
* கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பயத்தைக் கைவிடுங்கள். சுதந்திரமனப்பான்மையுடன் நிகழ்காலத்தை அணுகுங்கள். விசாலமான கண்ணோட்டத்துடன் மனதில் தன்னம்பிக்கையை மலரச் செய்யுங்கள்.
* நம் பழமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயலுங்கள். அதே சமயம் நவீன உலகத்திலுள்ள புதுமையையும் வரவேற்று மகிழுங்கள். நற்பண்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வாருங்கள்.
* வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். இதன் மூலம் செயலாற்றுவதற்கான துணிவும், வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கான நம்பிக்கையும் மனதில் நிலைக்கும்.
* பெரிய பிரமுகரின் மெய்க்காப்பாளன் எப்போதும் விழிப்புடன் இருப்பது போல, உலக வாழ்வில் விழிப்புடன் செயல்படுங்கள்.
* குதிரை மேல் சவாரி செய்பவன் போல, அதன் போக்கில் சென்று லகானை இழுத்துப் பிடிப்பது போல, பெற்றோர் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுப்பதுடன் கண்டிக்கவும் வேண்டும்.
* உலகிலுள்ள விஷயங்களில் எல்லாம் உன்னதமானது அன்பு ஒன்றே. அன்பில்லாத உலகம் அர்த்தமற்றதாகி விடும்.
* வாழ்க்கையே உங்களுக்கு கடவுளால் அளிக்கப்பட்டுள்ள பரிசுப்பொருள். பெரும்பாலானவர்கள் அதை திறந்து பார்க்காமல் காலம் கடத்துகிறார்கள். உள்ளத்தைத் திறந்து பாருங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பது புரியத் தொடங்கும்.
* மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உபசார வார்த்தைகளை மனமாறச் சொல்லுங்கள். புதிய சக்தியும், நல்ல அதிர்வுகளும் வெளிப்படும் விதத்தில் உங்களின் பேச்சு அமையட்டும்.
* நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆழ்மனதிற்குச் சென்று சுயபரீட்சை செய்து பாருங்கள். தவறுகள் நீங்குவதோடு மன அழுத்தம் காணாமல் போகும். அப்போது சுதந்திரக் காற்று வீசத் தொடங்கும்.
* "உலகிலுள்ள அனைவரும் என்னைச் சேர்ந்தவரே' என்னும் உணர்வை மனதில் நிலைநிறுத்துங்கள். அதுவே உங்களைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலையை உருவாக்கும்.
* தினமும் சிறிது நேரம் இசை, விளையாட்டு, தியானம் என்று பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுங்கள். இதனால், இறுக்கம் நீங்கி மனம் ஆசுவாசப்படத் தொடங்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum