Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீபாவளிக்கு குபேர பூஜை

Go down

தீபாவளிக்கு குபேர பூஜை             Empty தீபாவளிக்கு குபேர பூஜை

Post by oviya Sat Apr 11, 2015 2:30 pm

இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்காக குபேரன் வழிபட்ட சிவன், கும்பகோணம் அருகிலுள்ள சிவபுரத்தில் வீற்றிருக்கிறார். தீபாவளியன்று இங்கு நடக்கும் குபேரபூஜை சிறப்பானது.
தல வரலாறு: ஒருமுறை கைலாயத்திற்கு ராவணன் தூய்மையற்றவனாக வந்தான். அவனை நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் பதவியிழந்த குபேரன்,
தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் "சிவகுருநாதர்' என்னும் திருநாமம் பெற்றது.
குபேர பூஜை: இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியாக
அருள்பாலிக்கிறார். தீபாவளி நாளில் இத்தலத்தில் நடக்கும் குபேர பூஜை சிறப்பு மிக்கது. அப்போது வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம். அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள். பெரியநாயகி என்றும் பெயருண்டு. குபேரன் தனபதியாக இருந்த போது, அவனுக்கு தந்தையாக இந்திரனும், தாயாக இந்திராணியும், குழந்தையாக அக்னியும் வந்தனர். அவர்கள் பிரகாரத்தில் லிங்க வடிவில் வீற்றிருக்கின்றனர்.
அங்க பிரதட்சணம்: சிவபுரத்தில் பூமிக்கு அடியில் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இங்கு வந்த சம்பந்தர் இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சி அங்கப்பிரதட்சணம் செய்து ஆலயத்தை வலம் வந்து சிவனைப் பாடி வழிபட்டார். அதனடிப்படையில், சிவனுக்கு அங்கப் பிரதட்சண வழிபாடு நடக்கிறது. தலமரம் செண்பகமும், சுந்தர தீர்த்தமும் இங்குள்ளது. பட்டினத்தாரின் சகோதரி இங்கு வாழ்ந்ததாகச் சொல்வர்.
சிறப்பம்சம்: அம்பிகை சிங்காரவல்லி குழந்தைகளைப் பாதுகாப்பவளாக விளங்குகிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் நோய், பாலாரிஷ்ட தோஷம் நீங்க இங்கு வழிபடலாம். அம்மனுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, குழந்தையை சந்நிதியில் கிடத்தி வேண்டிக் கொள்கின்றனர். ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகன் இங்கு ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம். தட்சிணாமூர்த்தியின் காலடியில் ராகு இருப்பது மற்றொரு சிறப்பம்சம். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும். தட்சிணாமூர்த்தி அருகிலுள்ள சுவரில் திருமால் வெண் பன்றி வடிவில் (வராக வடிவம்) வந்து, தாமரை மலரால் சிவனை வழிபடும் சிற்பம் உள்ளது.
பைரவர் கோயில்: இத்தல பைரவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். இரண்டாம் கோபுர வாசலின் இடப்புறம் கோயில் உள்ளது. உளுந்து, வடை மாலை சாத்தி, தயிர் சாதம், கடலை உருண்டை நைவேத்யம் செய்து இவரை வழிபட வழக்கு விவகாரம், எதிரிபயம் நீங்கும். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இத்தல நடராஜர் சிலை மீட்கப்பட்டு, திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. புதிய நடராஜர், சிவகாமி சிலை தற்போது இங்குள்ளது. நால்வர், சுந்தரரின் மனைவி பரவையார், விநாயகர், முருகன், கஜலட்சுமி, துர்க்கை, சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 5 கி.மீ.,
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum