Top posting users this month
No user |
அத்தனை பேருக்கும் படியளக்கும் அஷ்டலட்சுமிகள்
Page 1 of 1

பண்டிகைகளிலேயே அதிக செலவு வைப்பது தீபாவளி தான். செல்வச்செழிப்பு உள்ளவர்கள் வீட்டில் தினமும் தீபாவளியாகத் தான் இருக்கும். நம் எல்லார் இல்லங்களிலும் தினமும் தீபாவளி போல் செல்வச்செழிப்பு பெருக, சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்குச் சென்று வரலாம். இங்கு தீபாவளியன்று விசேஷ யாகம் நடக்கும்.
தல வரலாறு: காஞ்சி மகாபெரியவருக்கு, அஷ்ட லட்சுமிகளையும் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை எழுந்தது. தன் விருப்பத்தை பக்தர்களிடம் கூறினார். பக்தர்களும் அதைச் செய்து முடித்தனர். தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி வெளிப்பட்டாள். எனவே, வங்கக்கடலையே பாற்கடலாக கருதி கடற்கரையில் கோயில் அமைக்கப்பட்டது.
கோயில் அமைப்பு: மூலவர் லட்சுமி நாராயணர் சந்நிதியில் ஆரம்பித்து, அஷ்ட லட்சுமிகளை தரிசித்து வலம் வரும் அமைப்பு, "ஓம்' வடிவில் உள்ளது. கீழ் தளத்தில் ஆதிலட்சுமி, தானிய லட்சுமி, தைரியலட்சுமி, இரண்டாம் தளத்தில் கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, மூன்றாம் தளத்தின் உச்சியில் தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.
தீபாவளிக்கு ஹோமம்: மகாலட்சுமியின் அவதார தினமான தீபாவளியை ஒட்டி இங்கு, "தன ஆகர்ஷண லட்சுமி குபேரர் ஹோமம்' இங்கு நடக்கும். அன்று அஷ்ட லட்சுமிகளுக்கும் பட்டு வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை நடத்தப்படும். ஹோம தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படும்.
ஆதிலட்சுமி: மகாவிஷ்ணுவின் இடப்பாகத்தில் தோன்றியவள் ஆதிலட்சுமி. பார்வதி, சரஸ்வதியை தனக்குள் ஐக்கியப்படுத்தி மூன்று தேவியரின் அம்சமாக திகழ்கிறாள். இவளே அனைத்து உயிர்களுக்கும், அவற்றின் செயல்களுக்கும் மூலாதாரமாகத் திகழ்கிறாள். இவளை தரிசித்த பிறகே மற்ற லட்சுமிகளை தரிசிக்கச் செல்ல வேண்டும்.
தானிய லட்சுமி: தானிய லட்சுமி, மேற்கு நோக்கி ஆறு கரங்களுடன் நெற்கதிருடன் காட்சியளிக்கிறாள். விவசாயம் செழிக்க இவளிடம் வேண்டிக் கொள்ளலாம். இவளது சந்நிதி எதிரில் 16 கைகளுடன் சக்கரத்தாழ்வார் இருக்கிறார்.
தைரியலட்சுமி: உடல், உள்ளம், அறிவு இம்மூன்றிற்கும் வலிமையைத் தருபவள் தைரியலட்சுமி. எட்டு கைகளுடன் வடக்கு நோக்கி காட்சி தரும் இவளை, "வீரலட்சுமி' என்றும் அழைக்கின்றனர். கைகளில் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம், கபாலம் உள்ளது. இவளிடம் வேண்டிக் கொள்ள தைரியம் அதிகரிக்கும்.
சந்தான லட்சுமி: பிரம்மா, உயிர்களைப் படைக்கும்முன் வழிபட்ட லட்சுமியான இவள், புத்திரபாக்கியம் தருகிறாள். கைகளில் கத்தி, கேடயம் உள்ளது. பீடத்தின் கீழே இரண்டு பெண்கள் சாமரம் வீசியபடி இருக்கின்றனர்.
கஜலட்சுமி: மகாலட்சுமி,பாற்கடலில் தோன்றிய போது புண்ணிய நதிகள் பெண்கள் வடிவில் அவளை நீராட்டுவதற்காக வந்தன. யானைகள் பொன் கலசங்களில் புனித தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தன. இவளே கஜலட்சுமி. உயர்பதவி, சமூக மதிப்பு உள்ளிட்ட ராஜயோகங்களை தருவதால் இவளை "ராஜலட்சுமி' என்றும் அழைப்பர்.
விஜயலட்சுமி: செயல்களில் வெற்றி கிடைக்கச் செய்பவள் விஜயலட்சுமி. சூரியன், சந்திரன் இருவரும் இவளது இரண்டு கண்களாக இருக்கின்றனர். இவளை, "வைஷ்ணவி' என்றும் அழைப்பர்.
வித்யாலட்சுமி: கல்வி, கலை, ஞானம் தரும் வித்யாலட்சுமியை "வாலை மோகினி' என்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இவளை வணங்குவர்.
தன லட்சுமி: செல்வத்திற்கு அதிபதியான தனலட்சுமி சங்கு, சக்கரம், வில், அம்பு, அமுத கலசம், தாம்பூலம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறாள்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் பெசன்ட்நகர்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 12.00, மாலை 4.00- இரவு 9.00.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum