Top posting users this month
No user |
Similar topics
ஆழ்ந்த அமைதியின் சொர்க்கம்!
Page 1 of 1
ஆழ்ந்த அமைதியின் சொர்க்கம்!
குன்றுகள் மோதிரம் போல சூழ்ந்திருக்க நடுவில் வைக்கப்பட்ட வைரம் போல ஜொலிக்கிறது இன்றைய புட்டபர்த்தி. ஆனால், அன்றைய புட்டபர்த்தி அப்படி இல்லை. பாம்பு குடிகொண்டிருக்கும் கரையான் புற்றுக்கள் நிறைந்த இடமாகவே காணப்பட்டது. இதன் காரணமாக இந்த இடத்திற்கு புட்டபர்த்தி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. "புட்ட' என்றால் "புற்று'.
அங்கே அவதரித்த சாய்பாபா 1947ல், தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், "வரக்கூடிய ஆண்டுகளில் இங்கே விரிந்து பரவும் பல அடுக்கடுக்கான சமூகத்திற்காக பிரமாண்டங்களை நீங்கள் உங்கள் கண்ணால் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொன்னபடி புட்டபர்த்தி இன்று ஒரு சுறுசுறுப்பான உலகம் போற்றும் டவுன்ஷிப்பாக உருவாகியிருக்கிறது. இவ்வூர்வீதிகளில் நடக்கும் ஒவ்வொருவரிடமும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் பாபா பற்றிய ஆனந்த அனுபவ நிஜக்கதை இருக்கிறது.
இப்போது இது வெறும் டவுன்ஷிப் அல்ல! ஒரு பயிலரங்க பட்டறை.
இந்த பட்டறையில் ஈடுபட்டு ஆன்மிகத்தை பருக பயில பல்வேறு நாடுகளில் இருந்து பாபாவின் பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஆஸ்ரமத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் காலடி எடுத்து வைத்ததுமே ஒரு புதிய அனுபவத்தில் ஒரு புதிய வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்பதை உணரலாம்.
பிரசாந்தி நிலையத்தை இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் "ஆழ்ந்த அமைதியின் சொர்க்கம்' என்று சொல்லலாம். 1950களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாபாவை தரிசிக்க வருபவர்கள் அவர்களே சொந்த சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்து உண்டு மரத்தடிகளில் தூங்கி எழுந்து, சித்ராவதி ஆற்றங்கரையில் தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள ஒதுங்க வேண்டி நிலையில்தான் இருந்தார்கள்.
ஆனால், பாபாவின் அன்பாலும் அருளாலும் உருவாக்கப்பட்ட பிரசாந்தி நிலையத்தின் இன்றைய நிலைமையே வேறு. அங்கே ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டடங்கள், தென்னிந்திய, வட இந்திய மற்றும் மேற்கிந்திய என்று மூன்று விதமான சமையல் கூடங்கள் இயங்குகிறது.
35 ரூபாயில் இருந்து 150 வரைதான் அறைகளுக்கான கட்டணம். இந்த கட்டணமும் கட்டமுடியாதவர்கள் ஐந்து ரூபாய் கொடுத்து பொது ஹாலில் தங்கலாம். காபி முதல் சாப்பாடு வரை இரண்டு ரூபாய்தான். பத்து ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டால் போதும். மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம். விசேஷ நாட்களில் அன்னதானம் உண்டு.
பக்தர்கள் நன்கொடை தரவேண்டும் என்றால் பிரசாந்தி நிலைய வளாகத்தி<லுள்ள பாங்கில் டிபாசிட் செய்யவேண்டும். இது போக மலிவு விலை பேரங்காடி, புத்தகக்கடை, நூலகம், கலை அரங்குகள், கருத்தரங்கு மண்டபங்கள், விருந்தினர் இல்லங்கள் இருக்கிறது.
பிரசாந்தி நிலைய ஆஸ்ரமத்தில் நிரந்தரமாக பத்தாயிரம் பேர் வரை தங்கியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டினர் பங்கும் அதிகம். இவர்கள் ஒரு ஒழுங்கோடு இந்த வளாகத்தினுள் அமைதியைக் கடைபிடிப்பதையும் குல்வந்த் ஹாலில் பிரார்த்தனையில் ஈடுபடுவதையும் காணலாம்.
ஆஸ்ரமத்திற்கு வெகு அருகிலேயே விமான நிலையம், ரயில் நிலையம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கே உள்ள நிகர்நிலைப்பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றது.
சத்ய சாய் ஸ்பேஸ் தியேட்டர், ஹெரிடேஜ் மியூசியம், சைதன்ய மியூசியம் போன்றவை புட்டபர்த்தி வரக்கூடிய பக்தர்களை ஈர்க்கும் பிரதான விஷயங்கள்.
43 வருடங்களாக பிரசாந்தி நிலைய கோயிலில் ஒரு சாதாரண குடில் அமைப்பில் பாபா வாழ்ந்து வந்தார். அந்த அறை எட்டுக்கு பத்து அளவே கொண்டதாகும். பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று யஜீர் மந்திர் வளாகத்திற்கு மாறினார். ஆஸ்ரமத்தின் முக்கிய நிகழ்வு என்பது அன்றாடம் இருவேளை நடைபெற்ற பஜனை மற்றும் பாபாவின் தரிசனம்தான். தரிசன முடிவில் தேர்ந்து எடுக்கும் பக்தர்களுடன் உரையாடல் என்று 60 வருடம் இந்த நிகழ்வு சீராய் நடந்தது.
பாபா மகாசமாதி அடைந்தபிறகு, இந்த பஜனைகள் இன்றும் தொடர்கின்றன. பஜனை முடிந்த பிறகு பக்தர்கள் மகாசமாதியை அருகில் சென்று தரிசிக்கவும் வேண்டுதல்களை ஒரு கடிதத்தில் எழுதி அங்கு வைக்கப்பட்டுள்ள கூடையில் சமர்ப்பிக்கவும் செய்கின்றனர். பலரும் ஊதியமில்லாமல் பணியாற்றி வருகின்றனர். பிரசாந்தி நிலையம் பாபாவின் வழிகாட்டுதலின் படி அழகாக, அற்புதமாக அமைதியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum