Top posting users this month
No user |
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
Page 1 of 1
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
* மகிழ்ச்சியைப் புதிதாகத் தேட வேண்டியதில்லை. நம் இயல்பான நிலையே மகிழ்ச்சி தான்.
* நீ செய்ய வேண்டிய ஒரே பணி உன்னிடமுள்ள மகிழ்ச்சியின்மையை நீக்குவது மட்டுமே. பின்னர் மகிழ்ச்சி தானாக வெளிப்படும்.
* இருதயம் ரத்தத்தை சுத்திகரிக்கும் அங்கம் மட்டுமல்ல. அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அதுவே. "இருதயம்' என்றால் "மையம்' என்று பொருள்.
* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடலோ இருதயத்தில் அடங்கி இருக்கிறது. எனவே, பிரபஞ்சமே இருதயத்தில் அடங்கியுள்ளது.
* சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இருதயம் மனதிற்கு ஒளியூட்டுவதாக இருக்கிறது.
* மூளையைக் கொண்டு கவனம் செலுத்தி பணியாற்றுவதால் சூடு, தலைவலி உண்டாகும். அதனால் இருதயத்தில் கவனம் செலுத்தி பணிபுரிவது நல்லது.
* சூழ்நிலை ஒருபோதும் மனிதன் விருப்பம் போல அமைவதில்லை.
* அமைதியுடன் வாழ்வதே இயல்பு. ஆனால் பெரும்பாலும் அமைதியின்மையைப் பற்றி மட்டுமே பேச நேரிடுகிறது.
* நல்லவர்களோடு பழக வேண்டும். இதனால், மனம் மகிழ்ச்சியில் மூழ்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் வாழ முடியும்.
* எண்ணங்களின் தொகுப்பே மனம். தேடிக் கண்டுபிடித்தால் மனம் என்ற ஒரு பொருள் தனியாக இல்லை என்பது தெரிய வரும்.
* எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கவே செய்யும்.
* எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்ற மனமே வலிமையானது. ஞானவழியில் மனம் செல்லுமானால் உலகமே கடவுள் மயமாகத் தெரியும்.
* அலை பாயும் மனம் எண்ணத்தால் சிதறிப் போய் பலவீனம் பெறுகிறது. மனம் ஒரே எண்ணத்தில் குவியுமானால் அதன் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
* மனிதன் தன்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை. உலக விஷயத்தைப் பற்றி அறிவதிலேயே நாட்டம் கொள்கிறான்.
* நீ நீயாகவே எப்போதும் இரு. இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும்.
* அகந்தையின் வலையில் விழுந்து விடாதே. அதனால் ஆரவாரம் மிக்க வெற்றுப் பேச்சை விட்டு விடு.
* மூச்சைக் கட்டுப்படுத்தினால் மனம் அடங்கும். அடங்கிய மனம் கட்டப்பட்ட மிருகம் போல எங்கும் அலையாமல் நிற்கும்.
* அருளின் உச்சவடிவம் மவுனம் தான். அதுதான் உயர்ந்தபட்ச உபதேசமாகவும் இருக்கிறது.
* நான் யார் என்ற கேள்வியை இடைவிடாது கேட்டுக் கொண்டிரு. பதிலைத் தேடிச் செல். வழி கிடைத்து விடும்.
* தனிமனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாயமே திருந்தி விடும். அதனால் மனிதன் சுயமாக தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* பலம் அற்றவன், தீயவன் என்று ஒருபோதும் உன்னை நினைக்காதே. உலகிலுள்ள ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்களே.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum