Top posting users this month
No user |
Similar topics
புனுகு சாத்துங்க! புண்ணியம் பெறுங்க!
Page 1 of 1
புனுகு சாத்துங்க! புண்ணியம் பெறுங்க!
அகத்தியர் வழிபட்ட சிவன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் திருமூலநாதர் என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். வாழ்வில் வளமும் நலமும் பெருக பக்தர்கள் புனுகு சாத்தி வழிபடுகின்றனர்.
தல வரலாறு: அகத்தியர் சிவனின் உத்தரவை ஏற்று தாமிரபரணி மற்றும் அவளது தோழியரான 10 பெண்களை தென்னகத்திற்கு அழைத்து வந்தார். பராசக்தியின் அம்சமான தாமிரபரணிக்கு, சமுத்திர ராஜகுமாரனாகிய சங்கராஜனை திருமணம் செய்து வைத்தார். பின்னர் சிவத்தலங்களுக்கு அழைத்துச் சென்றார். தினமும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் சிவபூஜை செய்யும் வழக்கம் கொண்ட அகத்தியர், இப்பகுதிக்கு வந்த போது மாலை நேரம் வந்து விட்டது. தாமிரபரணி இங்கே தண்ணீராய் பெருக்கெடுத்தாள். அந்த ஆற்றில் மணல் எடுத்து சிவலிங்கம் வடித்து வழிபட்டார். அவருடன் அவரது மனைவி லோபமுத்திரையும், காலாங்கிநாதர் போன்ற சித்தர்களும் விடிய விடிய விழித்திருந்து சிவனை பூஜித்தனர். மறுநாள் காலை தாமிரபரணியில் நீராடி திருமூலநாதரை வழிபட்டு வேள்வி ஒன்றை நடத்தினார்.
சிவனிடம்,""உம்மை நாடி வந்து வழிபடுவோரின் பாவம் போக்கி வாழ்வில் எல்லா வளமும், முக்தி இன்பமும் அளிக்க வேண்டும்'' என அகத்தியர் வேண்டினார். இறைவனும் "அப்படியே ஆகட்டும்' என வரம் அளித்தார். இதை அறிந்த தேவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி திருமூலநாதரை வழிபட்டனர்.
மூலக்கோயில்: இக்கோயில் மூலக்கோயில் என வழங்கப்படுகிறது. பழமையான இக்கோயிலில் இறைவன் திருமூலநாதர் எனவும், அம்மன் உலகாம்பிகை எனவும் வழங்கப்படுகின்றனர். இங்குள்ள திருமால் கரியமாணிக்கப் பெருமாள் எனப்படுகிறார். நற்சாலர் தீர்த்தம் இங்கே உள்ளது. தல விருட்சம் நெல்லி மரம். மூலவர் விக்ரகம் மணலால் ஆனது. அதனால் சிவலிங்கத்திற்கு குவளை (ஒரு வகை பாத்திரம்) சாத்தி வழிபாடு நடக்கிறது.
திரிபீட தலங்கள்: தாமிரபரணி நதிக்கரையிலுள்ள ஊர்க்காடு திருக்கோடியப்பர், வல்லநாடு திருமூலநாதர், அம்பாசமுத்திரம் திருமூலநாதர் ஆகிய மூன்றும் திரிபீடத் தலங்கள் என வழங்கப்படுகின்றன. அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட இந்த மூன்று தலங்களில் உள்ள சிவலிங்கமுமே மணலால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது. திருநெல்வேலி தல புராணம், தாமிரபரணி மகாத்மியம் ஆகியவற்றில் இந்த வரலாறு இடம் பெற்றுள்ளது.
புனுகு வழிபாடு: கிரக தோஷம் நீங்கி தொழில், வியாபாரம் வளர்ச்சியடையவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வமும், உடல்நலமும் பெறவும் பக்தர்கள் திருமூலநாதருக்கு புனுகு என்னும் வாசனைத் திரவியம் சாத்தி, தீபமேற்றி வழிபடுகின்றனர். நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், விரைவில் கட்டடப்பணிகள் முடியவும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் ரோட்டில் 35 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6.00-11.00, மாலை 5.00-8.00.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புனுகு சாத்துங்க! புண்ணியம் பெறுங்க!
» புண்ணியம் தேடி...
» புண்ணியம் செய்தவர்கள் கண்களில் இது படும்!
» புண்ணியம் தேடி...
» புண்ணியம் செய்தவர்கள் கண்களில் இது படும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum