Top posting users this month
No user |
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா!
Page 1 of 1

* எதையும் அறியாதவன் தான், விவாதம் செய்வதில் விருப்பம் காட்டுகிறான். மனப்பக்குவத்தை அடைந்தவனோ அமைதியைக் கடைபிடிக்கிறான்.
* வீடு கட்டும் வரை தான் சாரம் தேவைப்படுகிறது. அதுபோலவே, பக்தியிலும் விக்ரக ஆராதனை ஆரம்ப காலத்தில் மட்டுமே தேவைப்படும்.
* ஊரெங்கும் தேடினாலும் கடவுளை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அவர் உன் உள்ளத்திலேயே குடிகொண்டிருக்கிறார்.
* மனிதனே! உனது உள்ளத்திற்குள் ஆயிரம் ஆசைகள் குவிந்து கிடக்கலாம். ஆனால், அதையெல்லாம் மீறி உன் மனதை அடக்கி வைத்தால் தான் நீ வலிமை பெற்ற வீரனாக விளங்குவாய்.
* பிறருடைய குறையைப் பற்றிப் பேசுபவன் காலத்தை வீணாக்குகிறான். முதலில் அவன் தன்னிடமுள்ள குறைகளைத் திருத்திக்
கொள்வதே நல்லது.
* உன்னுடைய மத நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிரு. அதற்காக மற்றவர்கள் மீது சிறிதும் வெறுப்பு காட்டாதே.
* விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்டவனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால், முயற்சியற்றவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
* மனதை அடக்கக் கற்றுக் கொள். அதன் பின் துன்பத்தைக் கண்டு கலங்கத் தேவையிருக்காது.
* பழுத்த மரம் எப்போதும் தாழ்ந்து வளைந்து நிற்கும். அதைப் போலவே, நீயும் பணிவோடு இருக்கக் கற்றுக் கொள்.
* அரிய மனிதப்பிறவியை பயன்படுத்திக் கொள். இப்போது கடவுளை அறியாவிட்டால், இனி இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது.
* பணத்திற்கு ஒருபோதும் அடிமையாகாதே. நற்குணங்கள் கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.
* ஆணவத்தை விட்டு விடு. "நான்' என்ற எண்ணம் சிறிதும் வேண்டாம். பற்றில்லாமல் செயலில் ஈடுபடுவதே சிறந்தது.
* புலன்களை வென்றவனால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இருக்காது. அவனே மனிதர்களில் சிறந்தவன்.
* முதலில் கடவுளைத் தேடு. அதன் பின் உலக வாழ்வில் ஈடுபடு. அப்போது தான் மனச் சஞ்சலம் உண்டாகாது.
* கோபம் கொள்பவன் நல்லது, கெட்டதைப் பகுத்தறியும் திறனை இழந்து விடுகிறான்.
* எப்போதும் எச்சரிக்கையுடன் இரு. தீய எண்ணம் மனதில் நுழைய சிறிதும் இடம் கொடுப்பது கூடாது.
* முதலில் உள்ளமாகிய கோயிலில் கடவுளை பிரதிஷ்டை செய்து, நல்ல எண்ணத்தால் அவருக்கு அபிஷேகம் நடத்து.
* அவதார புருஷர்களை வணங்குவது கடவுளை வழிபடுவதற்குச் சமமானது.
* எத்தனை ஆபத்து குறுக்கிட்டாலும் ஞானிகளின் மனம் சிறிதும் கலக்கம் அடைவதில்லை.
* கடவுளை நம்புவது போல, அவருடைய திருநாமங்கள் மீதும் தீவிர நம்பிக்கை கொள்வது அவசியம்.
* கடவுளின் அருள் இல்லாமல் மனிதன் அறியாமையைப் போக்கிக் கொள்ள முடியாது.
* கள்ளம் கபடம் அற்ற எளிய மனிதர்கள் கடவுளை எளிதில் அடையும் பேறு பெறுகிறார்கள்.
* படிப்பதை விடக் கேள்வி ஞானம் உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது இன்னும் சிறந்தது.
* குடும்ப கடமையைச் சரிவர செய்து கொண்டிரு. ஆனால், மனம் எப்போதும் கடவுளின் திருவடியைச் சிந்திக்கட்டும்.
* ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவனுக்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமைசாலிக்கு எந்தக் காலத்திலும் அழிவு உண்டாகாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum