Top posting users this month
No user |
Similar topics
ஏற்றுங்க தீபம்!
Page 1 of 1
ஏற்றுங்க தீபம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகிலுள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில், மாசி மகத்தை ஒட்டி, மார்ச் 5ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. இங்கே கோரிக்கைகள் நிறைவேற தீபம் ஏற்றும் வழிபாடு நடக்கிறது.
தல வரலாறு: பிரம்மனிடம் வரம் பெற்ற இரணியன், மூவுலகங்களையும் அடிமைப்படுத்தினான். இதனால், அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக, பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு மும்மூர்த்திகளும், சப்தரிஷிகளும் திரண்டு வந்ததால், அந்த இடம் "திருக்கோஷ்டியூர்' என பெயர் பெற்றது. இங்கு சவுமிய நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
தீப வழிபாடு: திருமணத்தடை நீங்கி, நல்ல கணவர் அமையவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், வீடு, நகை வாங்குதல், நோய் குணமாகுதல், மனஆறுதல் என, எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் தெப்பத்திருவிழா அன்று, விசேஷ வழிபாடு செய்வர். தங்கள் கோரிக்கை நிறைவேற, குளக்கரையில் ஒரு அகல்விளக்கை ஏற்ற வேண்டும். யாரோ ஒருவர் ஏற்றி வைத்த தீபத்தை, வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். அந்த தீபத்தை வீட்டு பூஜையறையில் தினமும் ஏற்ற வேண்டும். கோரிக்கை நிறைவேறி விட்டால், அந்த விளக்கோடு புதுவிளக்கு ஒன்று வாங்கி, அடுத்த ஆண்டு மாசிமக தெப்பத்திருநாளில், தெப்பக்குளக்கரையில் ஏற்றி வைக்க வேண்டும். அந்த இரண்டும் வேறு சிலருக்கு பயன்படும். இவ்வாறு, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதுடன், பிறர் கோரிக்கையை நிறைவேற்றவும் நாம் காரணமாகி விடுகிறோம். இது மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்த புண்ணியத்திருநாளில் எல்லோரும் விளக்கேற்றுவோமே!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum