Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமணக் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்திலே!

Go down

திருமணக் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்திலே! Empty திருமணக் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்திலே!

Post by oviya Sat Apr 11, 2015 1:16 pm

முருகனின் தலங்களில் முதல்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
தல வரலாறு: சூரபத்மனால் துன்பப்பட்ட தேவர்கள் சிவனைச் சரணடைந்தனர். நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கிய சிவன், முருகனைத் தோற்றுவித்தார். முருகன் சூரனுடன் போரிட்டு வென்றார். இதற்கு பரிசாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்துக் கொடுத்தான். விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, லட்சுமி, பிரம்மா,சரஸ்வதி, நாரதர், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் திருப்பரங்குன்றத்தில் ஒன்று சேர தெய்வானை, முருகன் திருமணம் விமரிசையாக நடந்தது.
மணக்கோல முருகன்: அறுபடை வீடுகளில் இது முதல் படை வீடு. மற்ற படை வீடுகளில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நாரதர், இந்திரன், பிரம்மா, வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி, சூரியன், சந்திரன் உடனிருக்கின்றனர். முருகனுக்கு மயில் வாகனம் கிடைப்பதற்கு முன்புள்ள ஆடு, யானை வாகனங்கள் அருகிலுள்ளன. இதிலிருந்து இது பழமையான கோயில் என்பதை அறியலாம்.
ஐந்து மூலவர்: சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை ஆகியோர் தனித்தனி கருவறைகளில் காட்சியளிக்கின்றனர். துர்க்கையம்மன் நின்ற கோலத்திலும், கற்பக விநாயகர் கையில் பொங்கல், கரும்புடன் அமர்ந்த நிலையிலும், முருகன் தெய்வானையை மணந்த கோலத்திலும் வீற்றிருக்கின்றனர். சிவனும், பவளக்கனிவாய்ப்பெருமாளும் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் உள்ளனர்.
சத்தியகிரீஸ்வரர் வரலாறு: அசுரன் மகிஷன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். துர்க்கையாக வடிவெடுத்த பார்வதி அவனைக் கொன்றதால், அவளுக்கு கொலைப் பாவம் உண்டானது. அது நீங்க, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தாள். சிவனருளால் பாவம் நீங்கியது. அந்த லிங்கமே சத்தியகிரீஸ்வரர் என பெயர் பெற்றது. சிவன் குன்று வடிவில் இருப்பதால் "பரங்குன்றநாதர்' என்ற பெயரும் உண்டு. ஊருக்கு "பரங்குன்றம்' என்று பெயர் இருக்கிறது. பவுர்ணமியன்று இந்த மலையைச் சுற்றுவது சிறப்பு.
அம்மன் சந்நிதிகள்: சத்தியகிரீஸ்வரரின் துணைவியான ஆவுடைநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மூஞ்சூறு, மயில், நந்தி ஒரே பீடத்தில் உள்ளன. குகை ஒன்றில், ரிஷிகள், கந்தர்வர்கள் புடைசூழ அன்னபூரணி வீற்றிருக்கிறாள். இங்குள்ள லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு இட்டு வழிபடுகின்றனர்.
நக்கீரர் சந்நிதி: நக்கீரரை ஒரு பூதம் குகையில் சிறை வைத்தது. அங்கு ஏற்கனவே 998 பேர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அனைவரையும் காத்தருளும்படி, முருகன் மீது நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடல் பாடினார். காட்சியளித்த முருகன் பூதத்துடன் போரிட்டு வென்றார். பூதத்தின் கைபட்டதால், தனக்கு பாவம் உண்டானதாகவும், அதைப் போக்க கங்கையில் நீராட வேண்டும் என்றும் நக்கீரர் சொன்னார். முருகன் ஒரு இடத்தில் குத்தி கங்கையை வரச் செய்தார். அதில் நீராடிய நக்கீரர் பாவம் நீங்கப் பெற்றார். இந்த தீர்த்தம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது. இதற்கு "காசிதீர்த்தம்' என்று பெயர்.
பங்குனி உத்திர விழா: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், 14ம்நாள் திருவிழாவான பங்குனி சுவாதியன்று(ஏப்.6 ) தெய்வானை- முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்க மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றத்திற்கு எழுந்தருள்வர். திருமணம் முடிந்து, இரவு மதுரை திரும்பும் வரை மீனாட்சியம்மன் கோயிலில் நடை அடைக்கப்பட்டிருக்கும். மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவு பெறும்.
திருவிழா: வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.
இருப்பிடம்: மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 5.30 -1.00, மாலை 4.00- 9.00.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum