Top posting users this month
No user |
Similar topics
உழைப்பால் உயர்ந்தவனை உலகமே போற்றி வணங்கும்!
Page 1 of 1

ராமபிரானுக்கு, அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரைகள் "ராமகீதை' என்ற நூலாகக் தொகுக்கப்பட்டது.
அதிலிருந்து சில வரிகள்...!
* பெரிய மலை கூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம். ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
* செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்தூய்மை குறையத் தொடங்குகிறது.
* எங்கும் பரவியிருக்கும் காற்றைக் கூடக் கட்டி விடலாம். ஆனால், மனதை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல.
* கோபத்தால் மனிதன் பிறருக்கு செய்யும் தீமையை விட, தனக்கே அதிக தீங்கு செய்து கொள்கிறான்.
* இளமையில் உழைத்தவன், முதுமையில் வளமோடு வாழ்வான். உழைப்பால் உயர்ந்தவனை உலகமே வணங்கிப் போற்றும்.
* பிறருக்கு தீங்கு செய்யாதவர்கள், மீண்டும் மண்ணில் பிறப்பெடுத்து துன்பப்படத் தேவையிருக்காது.
* அநேகர் மனதில் ஆணவம் சிங்கம் போல அலைந்து திரிகிறது. இதை விட்டுவிட்டால் அமைதி குடி புகுந்து விடும்.
* இளமையிலேயே நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், முதுமையில் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.
* வீண் பேச்சில் ஈடுபடுபவன், தனக்குத் தானே பள்ளம் தோண்டிக் கொள்கிறான். தேவையற்ற நேரத்தில், மவுனமாக இருப்பது நல்லது.
* இன்ப, துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இதில் ஒன்றை மட்டும் அடைய நினைப்பது அறியாமை.
* ஏழ்மையில் தவித்தாலும், நேர்மையுடன் வாழ்வதே பெருந்தன்மை. சுயமுயற்சியால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சி காண்பதே சிறந்தது.
* பிறர் செய்யும் தீமையைக் கண்டு கொள்ளாமல் இருப்பவன், சமுதாயத்திற்கே தீங்கு செய்தவன் ஆவான்.
* முட்டாளோடு நட்பு கொள்ளக்கூடாது. அறிவாளியோடு உறவாடுவது கடினமானது என்றாலும், அதுவே நன்மை தரும்.
* கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையைத் திறம்பட வாழ்வதே நிறைவான வாழ்க்கை.
* பேராசையை ஒழித்து விட்டவன் பதட்டப்பட தேவையிருக்காது. எப்போதும் இனிமையுடன் வாழலாம்.
* கேட்டதையெல்லாம் புத்திசாலி நம்புவதில்லை. சிந்தித்து உண்மையை அறியவே அவன் முயற்சி செய்வான்.
* கல்வியறிவு இல்லாதவன் கூட, சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு தேவை முயற்சி தான்.
* சோம்பலை விட்டு உழைப்பவன், கஷ்ட காலத்திலும் ஒளி விளக்கு போல பலருக்கும் வழிகாட்டுவான்.
* பணத்தால் வரும் இன்பம் தற்காலிகமானது. மன திருப்தியால் உண்டாகும் இன்பமே வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum