Top posting users this month
No user |
அன்பே வா!
Page 1 of 1
அன்பே வா!
அன்பு என்பது ஒரு செயல் அல்ல. அது மனிதனின் இயல்பு. உண்மையான அன்பால் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை. ஆனால், பல சமயங்களில் இந்த அன்பே, பேராசை, கோபம், பொறாமை இவற்றுக்கு காரணமாகி விடுகிறது.
ஆம்! குழந்தைகள் மீதும், உறவுகள் மீதும் கொண்ட அன்பால் பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சூழ்நிலைகள் உருவாகி விடுகின்றன.
அன்பை இந்த உலகிலுள்ள எல்லாருமே அறிந்திருப்பர். பெற்றோரிடம், குழந்தைகளிடம், மனைவியிடம், நண்பர்களிடம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அன்பு என்றால் என்னவென்று தெரியாதவரோ, அதன் ஆழம் வரை சென்றிராதவரோ யாரும் இல்லை.
சிலர் அன்பைப் பற்றி புத்தகங்களில் படிக்கிறார்கள். இது நமக்குள் மாறுபட்ட கருத்துகளையே உருவாக்கும். உண்மையிலேயே மனஅழுத்தத்தை விட்டொழிக்கும் போது தான், நம்மால் பிறர் மீது அன்பு செலுத்த முடியும்.
அன்பில் இரு வகை உண்டு. ஒன்று நிபந்தனையுள்ள அன்பு. இது வியாபாரம் போன்றது. ""நான் விரும்பும் வகையில் செயல்புரிந்தால், நான் உன்னை நேசிப்பேன்,'' என்ற வகையில் இது சேரும். இன்னொன்று நிபந்தனையற்ற அன்பு. இதில் சுயநலம் இருக்காது. இவ்வகை அன்பே உறுதித்தன்மை பெற்றது.
அன்பு செலுத்த கற்றுக்கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஏனெனில், மனித மனம் சந்தேகங்களில் ஊறித்திளைப்பது. யாராவது ஒருவர் நம்மிடம்,""நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்,'' என்று சொன்னால், ""அப்படியா! உண்மையாகவா!'' என்று சந்தேகத்துடன் எதிர்க்கேள்வி பிறக்கிறது. அதே சமயம், ""உங்களை எனக்குப் பிடிக்காது,'' என்று சொன்னால், ""அப்படியா! உண்மையாகவா!'' என்று கேட்பதில்லை. இப்போது சொல்லுங்கள்... நம்மிடம் அன்பைக் கொட்டுகிறவர்களை நாம் சந்தேகிக்கிறோமா.. இல்லையா என்று!
சரி...இந்தக் குணத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியுமா!
நிச்சயமாக! நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரோ அல்லது அவளோ உன்னிடம் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே, அவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்தாலும் கூட, நீங்கள் அவர்கள் உங்கள் மீது அன்பு வைத்திருப்பதாக பாவனை செய்து கொள்ள வேண்டும். "ஓ! நீ என்மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாய்,'' என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தினாலும் கூட, அவர் நம்மைப் புண்படுத்தலாம். புண்படுதல் என்பதும் அன்பின் ஒரு அங்கம் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைப் புண்படுத்த அவருக்கு உரிமையிருக்கிறது என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது உன் மனம் நிரந்தர நிம்மதியில் திளைக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum