Top posting users this month
No user |
உடலில் தானாக தீப்பிடிக்கும் குழந்தை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியது!
Page 1 of 1

உடலில் தானாக தீப்பிடிப்பதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை வீடு திரும்பியது.
விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த கருணாகரன் - ராஜேஸ்வரி தம்பதியினரின் குழந்தைக்கு தானாகவே உடலில் தீப்பிடிப்பதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை கடந்த ஜனவரி 17ம் திகதி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 82 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை நேற்று வீடு திரும்பியது.
குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு மருத்துவ ரீதியாக எந்த காரணமும் இல்லை என அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைக்கு 40 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றின் முடிவில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் நாராயணபாபு தெரிவித்தார்.
மேலும், குழந்தையின் உடலில் தீ ஏற்படுவதற்கு மனித தவறுகளே காரணமாக இருக்கும் என்பதால், தொடர்ந்து கண்காணிக்கும் படி காவல்துறைக்கும், குழந்தைகள் நல வாரியத்திற்கு மருத்துவமனை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தையின் தாய் ராஜேஸ்வரி கருத்து வெளியிடுகையில்,
‘நாங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மாதத்திலே குழந்தை குணமாகிவிட்டது. ஆனால் அமைச்சர் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு வருமானம். வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. என் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று அழுதபடி கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum