Top posting users this month
No user |
உயர் பாதுகாப்பு வலய காணிகள் விடுவிப்பு! தொடர்ந்தும் ஏமாறும் பிரதேசவாசிகள்
Page 1 of 1

யாழில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிட சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது.
ஏப்ரல் மாத இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய 2ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே – 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே – 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே – 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே – 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே – 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே – 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ – 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே – 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே – 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை இராணுவம் மக்களின் நிலங்களில் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதோடு மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதியினையும் மறுத்து வருகின்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் திட்டியபடி வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum