Top posting users this month
No user |
தேர்தலுக்கு முன் எம்.பிக்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் மைத்திரி அரசு
Page 1 of 1

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுங்க தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப் பத்திரங்களை துரிதமாக வழங்கும் நோக்கில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன கடந்த முதலாம் திகதி அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கோரிக்கை விடுக்காத நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் தனது சுயவிருப்பத்தின் பேரில் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் 55 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
துறைமுகத்திற்கு வந்தடையும் போது சுமார் 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த வாகனத்தின் உள்நாட்டு சந்தை பெறுமதி இரண்டு கோடி ரூபாவையும் தாண்டும் என கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தப்பட உள்ள சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அனுமதிப் பத்திரங்களை விற்று சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் இலாபத்தை பெற முடியும் என்பதுடன் அந்த பணத்தை தேர்தலுக்கு செலவிட முடியும். இதன் காரணமாக அவசரமாக இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக அரசாங்க திறைசேரிக்கு 225 கோடி ரூபா இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. இந்த பதவிகளுக்காக அவர்களுக்கு பொதுமக்களின் நிதியில் இருந்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்படியான இலஞ்சத்தை கொடுத்து அவர்களை தம் பக்கம் தக்கவைத்து கொண்டது போல், தற்போதைய அரசாங்கமும் இப்படியான இலஞ்சத்தை வழங்குவது மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளிவிடும் நடவடிக்கை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum