Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈழத்தமிழ் சமூகத்தின் ஆளுமைகளுக்கு நா. தமிழீழ அரசின் அரசவையில் மரியாதை வணக்கம் நிறைவேற்றம்!

Go down

ஈழத்தமிழ் சமூகத்தின் ஆளுமைகளுக்கு நா. தமிழீழ அரசின் அரசவையில் மரியாதை வணக்கம் நிறைவேற்றம்! Empty ஈழத்தமிழ் சமூகத்தின் ஆளுமைகளுக்கு நா. தமிழீழ அரசின் அரசவையில் மரியாதை வணக்கம் நிறைவேற்றம்!

Post by oviya Fri Apr 10, 2015 12:32 pm

சமீபத்தில் காலமாகிய ஈழத்தமிழ் சமூகத்தின் ஆளுமைகளுக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழீழத் தாயகத்தில் காலமாகிய மருத்துவர் தியாகராஜா கங்காதரன், பிரான்சில் காலமாகிய திரு.கி.பி.அரவிந்தன் மற்றும் ஜேர்மனில் காலமாகிய திரு. இராமலிங்கம் நாகலிங்கம் ஆகிய ஆளுமைகளுக்கே இவ்மரியாதை வணக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறுகின்ற மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு அரசவை உறுப்பினர் திரு.மரியராசா மரியாம்பிள்ளை அவர்களினால் வழிமொழியப்பட்டுள்ள இத்தீர்மானம் அரசவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்மரியாதை வணக்கத் தீர்மானத்தின் முழுயான விபரம்

அரசவையின் மரியாதை வணக்கம்

Dr தியாகராஜா கங்காதரன்

நீண்ட போர்க் காலத்தின் போது வன்னி மக்களிடையே உயிர்காக்கும் மருத்துவப் பணியாற்றிவந்த அரும்பெரும் மனிதர் மருத்துவர் Dr தியாகராஜா கங்காதரன் அவர்கள் தனது 86 வது வயதில் 02.02.2015 அன்று மறைந்த செய்தி எம்மெல்லோரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது.



1929 ஆம் ஆண்டில் பிறந்த டாக்டர் கெங்காதரன் அவர்கள் இலங்கை மருத்துவக் கல்லூரியில் இணைந்து தனது 24 வது வயதில் வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்று முல்லைத்தீவு வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார்.

மகப்பேற்றுச் சிகிச்சைத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றதன் பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலும், யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனை ஊடாகவும் பொது மருத்துவராக இவராற்றிய நீண்ட சேவை மக்கள் மத்தியில் இவருக்குத் தனியிடத்தைப் பெற்றுத் தந்தது.

இருந்தபோதும் 1995ல் யாழ் மக்களோடு வன்னிக்கு இடம்பெயர்ந்த காலம் முதல் இறுதிவரை எமது மக்களது அவலம் துடைக்கும் ஊதியம் பெறாத மருத்துவப்பணி ஒருபக்கமிருக்க விடுதலைப் போராட்டத்துக்கான அச்சாணியாக வளர்ந்து வந்த மருத்துவ சேவையும் அதனோடு பின்னிப்பிணைந்த மருத்துவக் கல்லூரிக்கான இவரது தலைமையும் வழிகாட்டலும் வரலாற்றில் பதிந்து விட்டவை.

மருவத்துவர் கங்காதரன் அவர்கள் தமிழ் மக்களிடையே ஆற்றிய சேவையின் ஐம்பது ஆண்டு நிறைவினை 2004ல் அவரது 75வது பிறந்த நாளை முன்னிட்டு தேசியத் தலைவர் அவர்கள் கௌரவித்தார்.

மருத்துவர் அவர்கட்கு 'மாமனிதர் ' என்ற விருது வழங்குவதாக கொள்கை அளவில் தலைவர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் இறுதிப் போர்ச் சூழல் அது நிறைவேறாமல் போகக் காரணமானதென அறியும்போது நாம் சோகம் அடைகிறோம்.

பொன்னம்பலம் மருத்துவ மனையின் மூலம் கங்காதரன் ஐயா அவர்களை கண்டறிந்த பல்லாயிரம் பொது மக்களும் போராளிகளும் அவரது மென்மை, சுறுசுறுப்பு, எளிமையான சேவை, பண்பு எல்லாவற்றினையும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.

இவ்வேளையில் எமது தேச விடுதலைக்காகப் பெரும் பங்களித்துதவிய உயர்ந்த அம்மனிதரை, மாமனிதரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் நினைவுகூர்ந்து அவருக்கான மரியாதை வணக்கத்தை இந்த அமர்வில் தெரிவித்துக் கொள்கிறது.

கி.பி.அரவிந்தன்

சுந்தர் மற்றும் கி.பி.அரவிந்தன் என்ற பெயர்களில் தோழர்களால் அறியப்பட்ட கிறீஸ்தோப்பர் பிரான்சிஸ் அவர்கள் 08. 03. 2015 ஞாயிறன்று காலம் ஆகியமை தமிழ் மக்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியிருந்தது.



நெடுந்தீவை மூலத்தொடர்பாகக் கொண்ட குடும்பத்தின் வழியாக, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், பின்னர் பிரான்சு மொந்தினி லே கோர்மை நகரைப் புலம்பெயர் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவர்.

தியாகி சிவகுமாரனுடன் கூடிச் செயலாற்றியவர். பின்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சிறந்த கவிஞராகவும் ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர். நல்ல பண்பாளர். கருத்துச் செழுமை கொண்டவர்.

தமிழ்நாட்டில் செயற்பட்ட காலங்களில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுத்தளத்தை அங்கு கட்டி எழுப்புவதில் அயராது உழைத்தவர். நல்ல பல நண்பர்களையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்த்தவர். அனைத்துலகச் சமூகத்தைச் சேர்ந்த முற்போக்கு நண்பர்களுடனும் தோழமை கொண்டிருந்தவர்.

1990 களின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு புலம் பெயர்ந்த பின்னர் கலை இலக்கிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு புலம் பெயர் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ்க் கல்வி முயற்சிகளிலும் ஆர்வமாகச் செயற்பட்டவர். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் இடம்பெற்ற போராட்டப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.

புதினப்பலகை தமிழ் இணையத்தை உருவாக்குவதில் முனைப்பாகச் செயற்பட்டு அதன் ஆசிரியராகவும் தனது இறுதிக் காலம் வரை செயற்பட்டவர்.

அரவிந்தன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், தோழர்கள் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்து கொள்வதோடு அவரது முற்போக்குச் சிந்தனை வழிவந்த அரும்பணிகளை நினைவு கூர்ந்து அவருக்கான மரியாதை வணக்கத்தையும் இந்த அமர்வில் தெரிவித்துக் கொள்கிறது.

திரு. இராமலிங்கம் நாகலிங்கம்

தமிழாசிரியர் திரு. இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி காலம் ஆகிப் போனமை தமிழ் மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர் புலம்பெயர் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க் கல்வி மற்றும் கற்பித்தல் திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியவர். குறிப்பாக ஜேர்மனியில் தமிழாலயங்களின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி தமிழாலயங்களின் தந்தை என மக்களால் போற்றப்பட்டவர்.



தலைமைத் தமிழாசிரியராகவும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகியாகவும் இவர் ஆற்றிய பணி வரலாற்றில் நீடித்து நிலைபெறக் கூடியது. வயதினை ஒரு தடையாகக் கருதாமல் எப்போதும் உற்சாகமாகப் பணிபுரிந்து ஏனைய ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி பணி செய்வித்தவர்.

இவரது அரும்பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசியத் தலைவர் அவர்களும் இவரைப் பாராட்டி கௌரவம் வழங்கியமை இவரது உயர்வான சேவைக்குச் சான்றாக அமைகிறது.

நாகலிங்கம் ஆசிரியர் அவர்களது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் அனைவருடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கரங்களை இணைத்து, அவருக்கு இந்த அவையில் மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. என மரியாதை வணக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum