Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோயிலுக்கு போயிற்று வாறன் என்று கூறிச் சென்றவன் வீடு திரும்பவேயில்லை: தாயார் அழுதழுது சாட்சியம்

Go down

கோயிலுக்கு போயிற்று வாறன் என்று கூறிச் சென்றவன் வீடு திரும்பவேயில்லை: தாயார் அழுதழுது சாட்சியம் Empty கோயிலுக்கு போயிற்று வாறன் என்று கூறிச் சென்றவன் வீடு திரும்பவேயில்லை: தாயார் அழுதழுது சாட்சியம்

Post by oviya Wed Apr 08, 2015 2:47 pm

கோயிலுக்குபோயிற்றுவாறன் என்றுகூறிச்சென்றவன் வீடு திரும்பவேயில்லை. எனக்குள்ளது ஒரேயொரு மகன். அவனை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு முன் தாயொருவர் அழுதழுது சாட்சியம் அளித்துள்ளார்.
கல்முனையில் நேற்று நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறிவதற்காக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதழுது சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த திருமதி கலாமாலினி திருநாவுக்கரசு என்ற பெண்ணே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

இவ்வமர்வு கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக மேல்தளத்தில் ஆணைக்குழு தலைவர் மெக்ஸ்வெல் பரணகம முன்னிலையில் நடைபெற்றது.

அங்கு பிள்ளையைப்பறி கொடுத்த தாயார் திருமதி கலாமாலினி திருநாவுக்கரசு, அவரது கணவன் திருநாவுக்கரசு ஆகியோர் முதலாவது சாட்சியமளித்தனர்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

2008 யூலை மாதம் 20ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் எமது கல்முனைப் பிரதேசத்தை றவுண்ட்அப் பண்ணினர். மகன் போன்ற இளம் பிள்ளைகளை புகைப்படம் எடுத்தனர்.

07நாட்களின் பின்னர் முகமூடியணிந்த இருவர் வந்து சிடி கொடுக்க வேண்டும் என்று கூறி மகனைக் கேட்டார்கள். எனக்கு அவர்களை யார் என்று தெரியாது. எனக்கு அப்போது சந்தேகம் வந்தது. மகன் வீட்டில் இல்லை என்றேன்.அவர்கள் போய்விட்டார்கள்.

சற்றுநேரத்தில் மகன் வீட்டிற்கு வந்தபடியால் எனது சந்தேகம் தீர்ந்துவிட்டது. அன்று மாலை கோயிலுக்கு போயிற்றுவாறன் என்றுகூறிச்செ ன்றவன்தான் பின்னர் வீடு திரும்பவேயில்லை.

என்ர பிள்ளை பிரசாத் ஓஎல் படிச்சபிள்ளை. குடும்பத்திற்கு ஒரேயொருபிள்ளை. ஒரு குற்றமும் செய்யாதவனை ஏன் கொண்டுபோனாங்களோ தெரியாது.

நாம் இதுவரை பொலிஸ் மனித உரிமை ஆணைக்குழு, ஜ.சி.ஆர்சி, ஐ.நா. போன்ற அமைப்புகளுக்கெல்லாம் முறைப்பாட்டைச் செய்துள்ளோம் .இறுதியாக கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு கல்முனை மட்டக்களப்பு கொழும்பு அம்பாறை போன்ற 4 சந்தர்ப்பங்களில் முறையிட்டுள்ளோம்.

ஜனாதிபதியிடமும் 4 தடவைகள் முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எவ்வித பதிலும் வரவில்லை. மகனையும் காணவில்லை. அவனை மீட்டுத்தாருங்கள். என்று கூறி அழுதார்.

இரவில் கொண்டுசென்று கணவனை இன்னும் காணவில்லை

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த திருமதி அவ்வாஉம்மா சாட்சியமளிக்கையில்:

கடந்த 1987.06.05ஆம் திகதி இரவு 8.30 மணியளவில்ல வீட்டுக்கு வந்த சிலர் எனது கணவனை அழைத்துச் சென்றனர். அதில் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் தமிழில் கதைத்தனர். பிடித்துக் கொண்டுபோகும்போது நான் உரக்கக்கத்தினேன்.

அதன்பின்னர் இன்னும் நான் அவரைக் காணவில்லை. எனக்கு 5பிள்ளைகள். ஒன்று இநற்துவிட்டது. வயலுக்குச்சென்று கதிர்பொறுக்கி கஸ்ட்டப்பட்டு வயிற்றைக்கழுவி வருகின்றேன்.

ஒருவருடத்தின் பின்னர் அரசினுடைய 50ஆயிரம் ருபா நஸ்ட்டஈடு மட்டுமே கிடைத்தது. வீடும் இல்லை. கணவனும் இல்லை. என்றார்.

வியாபாரத்திற்கு சென்றவேளை சுட்டுக்கொல்லப்பட்டார்!

கல்முனையைச் சேர்ந்த மீராலெவவை நஜீமா சாட்சியமளிக்கையில்:

கடந்த 1992.09.15ஆம் திகதி வியாபாரத்திற்காகச் சென்றவேளை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது எனது மகனுக்கு 6 மாதம். சுட்டுக்கொல்லப்படவரின் பிரேதம் கிடைத்தது. 06 மாதத்தின் பின்னர் நஸ்ட்டஈடாக 50ஆயிரம் ருபா கிடைத்தது.



பட்டப்பகலில் அன்ரி வீட்டபோன மகனை பின்னர் காணவில்லை!

கல்முனை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த திருமதி வீரசிங்கம் கனகமணி சாட்சியமளிக்கையில்:

1990.06.18ஆம் திகதி பகல் 11மணியளிவல் வீட்டிலிருந்து அன்ரி வீட்ட போய்வாறன் என்றுகூறி விட்டுச்சென்ற எனது அருமை மகனை இன்னும் காணவில்லை. வீரசிங்கம் கஜேந்திரன் அவனது பெயர்.. வழியில் காணாமற்போயிருக்கிறான். அந்தநேரமெல்லாம் இராணுவம் ரோந்தில் ஈடுபடுவது வழக்கம்.

என்னால் மகன் காணாமற்போயிருந்ததை நம்ப முடியாமலிருந்தது .நான் நானாக இல்லை. அதனால் அந்தகாலத்தில் நான் யாரிடமும் முறையிடவில்லை. அதன் பின்னரே பொலிசில் முறையிட்டேன்.

இதுவரை எந்த நஸ்டஈடோ எதுவுமொ கிடைக்கவில்லை. அவன் காணாமற்போவதற்கு முதலே எனது கணவர் வீரசிங்கம் மரணித்துவிட்டார் என தெரிவித்தார்.











சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற்போனோர் விசாரணை, இது எங்களையும் ஏமாற்றுகின்றது: காணாமல் போனோரின் உறவுகள் ஆதங்கம்

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழலின்போது காணாமற்போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கை இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

காணாமல் போனோர் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான ஆணைக்குழு ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தாவூர், திருக்கோவில், இறக்காமம் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு இவ் உறவுகளின் முறைப்பாடுகளையும் வாய்மூல மற்றும் ஆவணங்களின் சாட்சியங்கள் போன்றவற்றை பதிவு செய்யும் இரண்டு நாட்கள் கொண்ட ஆணைக்குழுவின் நடவடிக்கை இன்று(08) புதன்கிழமை ஆரம்பமானது.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 55 முறைப்பாடுகளையும், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 40 முறைப்பாடுகளையும், காரைதீவு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தலா ஒவ்வொரு முறைப்பாடுகளும் அடங்கலான 97 முறைப்பாட்டாளர்களை ஆணைக்குழு அழைத்திருந்தது. இவற்றுள் குறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே ஆணைக்குழுவின் விசாரணைக்கென சாட்சியமளித்தனர்.

ஏனையோர் இவ் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதேவேளை நாளை வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 21 முறைப்பாட்டாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாட்டாளர்களுக்கும், இறக்காமம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 16 முறைப்பாட்டாளர்களுக்குமாக விசாரணை நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் அழுதவாறு எம்மை தொடர்ந்தும் ஏமாற்றுவதை விட்டு விடுங்கள், இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என அமைதியான கோசங்களை எழுப்பியவாறு 'ஐ.நா விசாரணையே வேண்டும்.

உள்நாட்டு விசாரணை வேண்டாம், 'நாங்கள் கேட்பது எங்கள் சொந்தங்களை நீங்கள் தருவது ஆடு மாடு கோழிகளை' 'சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற்போனோர் விசாரணை இது எங்களையும் ஏமாற்றுகிறதே' 'நல்லிணக்கம் சொல்லும் அரசே ஐ.நாவின் விசாரணைக்குழுவை அழை' 'உணவின்றி தவித்து போராடுகின்றோம் எமது உறவுகளைத்தேடி' போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாற,

பிரதேச செயலகம் முன்பாக காணாமல் போன சொந்தங்களின் உறவினர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதுவரை ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைக்கு எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத அதேவேளை இவ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளில் சொற்ப முறைப்பாடுகள் மட்டுமே விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறாக நலிவுற்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களின் கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படும் விசாரணை எமக்கு வேண்டாம். துரிதமாகவும் பக்கச் சார்பற்றும் விசாரணை செய்யும் சர்வதேச கண்காணிப்புடனான விசாரணையே எமக்கு வேண்டும் இல்லையேல்,

எமது கவனயீர்ப்பு பகிஷ்கரிப்பு வடகிழக்கில் முழுவதும் தொடர்ந்து கொண்டே செல்லும் என காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட அமையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறியியலாளர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.

இதேவேளை தமது உறவுகளை இழந்த பொதுமக்கள் பலர் ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீர்மல்க உருக்கமான சாட்சியமளித்தனர். 1988ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆந்திகதி மேசன் வேலைக்காகச் சென்ற எனது மூத்த மகன் ஆறுமுகம் புஸ்பராசாவையும், 1990 பெப்ரவரி 15ஆம் திகதி கடைக்குச் சென்ற 30 வயதுடைய எனது இரண்டாவது மகனின் நிலை இதுவரை எனக்குத் தெரியாமலேயே உள்ளது என கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு நாவற்காடு மகா சக்தி வீதியைச் சேர்ந்த நாகம்மா வைரமுத்து தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு பிறந்த எனது மகன் கோயிலுக்குச் சென்று வரச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனது மகனை மீட்டுத் தாருங்கள் என திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் சரஸ்வதி ஆணைக்குழு முன்நிலையில் இவர் கதறி அழுதவாறு சாட்சியமளித்தார். 1982ஆம் ஆண்டு 22 வயதுடைய எனது மகன் மாடு மேய்க்கச் சென்றார்.

அவர் வீடு திரும்பாததால் எத்தனை முறை தேடி அலைந்தும் அவர் வீடு வரவில்லை ஆனால் சொற்ப காலத்தின் பின் அவர் அகால மரணமடைந்து விட்டார் என செய்தி தாங்கிய மடல் ஒன்று எம் வீடு வந்தது. அதன் பின்னர் என் மகன் பற்றிய எந்தத் தகவலும் கிட்டவில்லை என ஆலையடிவேம்பு முருகன் கோயில் வீதி வைரமுத்து பேரின்பராசா ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

22 வயதுடைய மாநாதன் கனகராசா என்ற எனது மகன் கல்வியில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவர் கற்ககை நெறியினை மேற்கொண்டு அம்பாறை நகருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தமிழ் முஸ்லிம் பிரச்சினையொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வான்வெளியாக வந்த ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது எனது மகன் இறந்ததாக அயலவர்கள் தெரிவித்தார்கள்.

அவரைத் தேடிப்பார்த்தபோது எம்மால் கண்டு கொள்ள முடியவில்லை என கோளாவில் கோவில் வீதி பொன்னுத்துரை சின்னப்பிள்ளை சாட்சியமளித்தார். 1997ஆம் ஆண்டு மேசன் வேலைக்குச் சென்ற இராசமாணிக்கம் சந்திரமோகன் வீடு வந்து சேரவில்லை. அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொண்டு சென்றதாக அயலவர்கள் சொன்னார்கள் அவருக்கு என்ன ஆனதென்று இதுவரை எனக்குத் தெரியாமல் உள்ளது என தம்பிலுவில் க.சரஸ்வதி தெரிவித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆந் திகதி தலைமுடி வெட்டுவதற்காகச் சென்ற சா.கிருபைராசா என்ற மகனும், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி கூலித் தொழிலுக்காகச் சென்ற சா.சிவகுமார் என்ற எனது மற்ற மகனும் இதுவரை வீடு திரும்பN;வ இல்லை.

இவர்கள் இல்லாத நாட்கள் நரகத்தில் பயணிப்பதுபோல் உள்ளது. இவர்களை மீட்டுத்தாருங்கள் என்று அக்கரைப்பற்று எட்டாம் பிரிவில் வசிக்கும் சாமித்தம்பி தெய்வானை கண்ணீர் மல்க ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் புலம்பியவாறு சாட்சியமளித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum