Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மூன்றாம் எண்ணுக்குரிய ""குரு'' - உச்சிப்பிள்ளையார்

Go down

மூன்றாம் எண்ணுக்குரிய ""குரு'' - உச்சிப்பிள்ளையார் Empty மூன்றாம் எண்ணுக்குரிய ""குரு'' - உச்சிப்பிள்ளையார்

Post by abirami Mon Apr 06, 2015 5:18 pm




தமிழகத்தில் மிகவும் பிரபலமான உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு பலமுறை சென்று வந்திருப்பீர்கள்.
குருவுக்குரிய மூன்றாம் எண்ணுக்கும் இந்த விநாயகருக்கும் தொடர்புண்டு என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?
தல வரலாறு: சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கை மன்னர் விபீஷணருக்கு ராமர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தைப் பரிசாக வழங்கினார். இடையில் அதை எங்கும் கீழே வைக்கக்கூடாது என்பது நிபந்தனை. வரும் வழியில், காவிரியில் வெள்ளம் பெருகி ஓடவே,நீச்சலில் ஆர்வம் கொண்ட விபீஷணர், தன் கையில் இருந்த விமானத்தை ஒரு சிறுவனிடம் கொடுத்து "கீழே வைத்து விடாதே, குளித்து விட்டு வந்து பெற்றுக்கொள்கிறேன்,'' என்றார். பையனோ கீழே வைத்து விட்டான். கோபங் கொண்ட விபீஷணர்அந்தணச் சிறுவனின் தலையில் குட்டினார். அந்தச் சிறுவன் விநாயகராககாட்சி கொடுத்தார். ரங்கநாதர் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்பது விநாயகப் பெருமான் திருவுளம் என அறிந்தார் விபீஷணர். இந்த விநாயகர் திருச்சியிலுள்ள மலைக்கோட்டையில் "உச்சிப்பிள்ளையார்' என்னும் திருநாமத்துடன் உள்ளார். உச்சிப்பிள்ளையாரை மலைப்படிகளில் ஏறி தரிசிக்க முடியாதவர்கள் மலையடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகரை தரிசித்து பலனடைகின்றனர்.சுகப்பிரசவ பிரார்த்தனை: குழந்தை இல்லாதவர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வணங்கி, தாயுமான சுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை சன்னதிக்குச் சென்று, "" ஹே சங்கர; ஸ்மரஹர; பிரமாதிநாத; மன்னாத; ஸாம்ப; சசிசூட; ஹர; திரிசூலின்; சம்போ; ஸீகப்ரசவக்ருத்; பவமே; தயாளோ; ஸ்ரீமாத்ருபூத; சிவபாலயமாம்; நமஸ்தே'', என்ற மந்திரத்தை மூன்று முறை சொன்னால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பமான பின், தினமும் வீட்டில் இதே மந்திரத்தை 11 முறை ஜெபித்து வந்தால், பிரசவத்தில் சிரமம் ஏதும் இருக்காது.
கோயில் சிறப்பு: மலையின் கீழ்புறம் விபீஷணர் பாதம் இரண்டு பாறையின் மீது உள்ளது. உச்சிவிநாயகர்
சன்னதியும் படிகளின் தோற்றமும்,யானையின் துதிக்கை போலவே உள்ளதாகச் சொல்வர். உச்சிப்பிள்ளையார் கிழக்கு நோக்கி கருணையே வடிவமாக காட்சி தருகிறார். உலகத்தவரால் "உச்சிவிநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். திருச்சியில் எங்கிருந்து நோக்கினாலும், இவரது சன்னதி தெரியும் என்பதால் மானசீகமாக இவரை வணங்கினாலே ஆயிரம் கோடி பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
மூன்றாம் எண் சிறப்பு: 273 அடி உயரத்தில் இருக்கிறது இவரது சன்னதி. 417 படிகளை கடந்து சென்றால் இவரை தரிசிக்கலாம். இந்த எண்களைக் கூட்டினால் மூன்று என்ற எண் வரும்.(2+7+3=12-3) (4+1+7=12-3). இந்த எண் குருவுக்குரியது. குரு பார்வை இருந்தால் தான் திருமண பிராப்தி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பர். இந்த குருவருள் இல்லாதவர் களுக்கு குருவாய் இருந்து அருள் தருவதால் தான், குருவுக்குரிய எண் வரும்படியாக உச்சி விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதாக கருத இடமிருக்கிறது. இங்கிருந்து பார்த்தால், ஸ்ரீரங்கத்தையும், திருச்சியையும் பிரிக்கும் காவிரிநதியும், காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையில் குடிகொண்டுள்ள ரெங்கநாத பெருமாளின் கோயில் கோபுரமும், திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரிகோயில் கோபுரமும், எடுப் பாகவும், மிடுக்காகவும் தோன்றும். 150 கிலோ கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தியன்று உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் அரிசியால் ஆன இரண்டு பெரிய கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்யப்படும். இவற்றின் எடை 150 கிலோ. மலைக்கோட்டையில் இருக்கும் இந்த மாமன்னரை ஆண்டில் எந்நாளிலும் சென்று தரிசித்து வரலாம்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum