Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


25 அடி உயர கிருஷ்ணர் ( செப்.1 கிருஷ்ண ஜெயந்தி )

Go down

25 அடி உயர கிருஷ்ணர் ( செப்.1 கிருஷ்ண ஜெயந்தி ) Empty 25 அடி உயர கிருஷ்ணர் ( செப்.1 கிருஷ்ண ஜெயந்தி )

Post by abirami Mon Apr 06, 2015 5:09 pm


கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக, பாண்டவர்களைக் காக்க அவர் லீலைகளை நிகழ்த்தி விட்டு, "பாண்டவ தூதப் பெருமாள்' என்ற பெயரில் பூலோகத்தில் வாசம் கொண்டார். இந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது.
தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப் படுத்த நினைத்தான் . துரியோதனன், அவர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீதுபசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அந்த மல்லர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்
கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, ""கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள்,'' என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, அந்த தரிசனத்தைப் பெற்றார்.
தல சிறப்பு: இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த கிருஷ்ணரின் பெயர் "தூதஹரி' என குறிக்கப்பட்டுள்ளது. திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். 25 அடி உயரமுடைய அவரது சிலை அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம். ருக்மிணி, பாமா அருகில் உள்ளனர். யோக நரசிம்மர் இங்கு அருள்கிறார். இத்தலத்தில் "அருளாளப்பெருமாள் எம்பெருமானார்' என்ற ஆச்சாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அனேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகளும் இங்கு அருள்பாலிக்கிறார்.
ரோகிணி நட்சத்திரம்: ரோகிணிதேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர் களில் முதலில், ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணரே ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி "விஸ்வபாதயோக சக்திகளை' கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப் புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
திருவிழா: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம்.
திறக்கும் நேரம்: காலை 7- 11மணி, மாலை 4- 7.30 மணி.
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் அமைந்துள்ளது.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum