Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    புட்டபர்த்தி புனிதர்

    Go down

    புட்டபர்த்தி புனிதர் Empty புட்டபர்த்தி புனிதர்

    Post by abirami Mon Apr 06, 2015 5:07 pm




    பரித்ராணாய சாதூனாம் விநாஷாயசதுஷ்கிருதாம் தர்ம ஸம்ஸ்தாபானார்த்தாய சம்பவாமி யுகேயுகே' என்று பகவான் கிருஷ்ணன் பகவத்கீதையில் கூறியது போல், சாதுக்களை காப்பாற்றவும், தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதாரங்கள் நிகழ்கின்றன. "அவதாரம்' என்றால் "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். அனைத்துச் சக்திகளும் பொருந்திய இறைவன், சக்தியற்ற மனிதர்களை உயர்த்த மனமிரங்கி கீழே இறங்கி வந்து மனிதரோடு மனிதராக வாழ்ந்து அவர்களை உய்விப்பதே அவதார நோக்கம்.
    சத்யசாய்பாபா, 1926, நவம்பர் 23ல் ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டபர்த்தி என்ற புண்ணிய தலத்தில், பெத்தவெங்கப்பராஜூ என்பவருக்கும், ஈஸ்வரம்மாவுக்கும் திருக்குமாரராக அவதாரம் செய்தார். ஒருமுறை, ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது நீல நிற ஒளிப்பந்து தன்னை நெருங்கி தன் வயிற்றினுள் சென்றதைக் கண்டு மூர்ச்சை அடைந்தார். இப்படி நிகழ்ந்ததே பாபாவின் பிரவேசம்.
    1947ல், பாபா தனது சகோதரர் சேஷம்ம ராஜூவுக்கு எழுதிய கடிதத்தில் தன் அவதாரநோக்கத்தை கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்.
    ""மனித குலத்திற்கு மகிழ்ச்சியை அளித்து அவர்களை காப்பாற்றுவதே என் பிரமாணம். நற்குணங்கள் கொண்ட பாதையை விட்டுவிலகியவர்களை மறுபடியம் சீர்திருத்தி காப்பாற்றுவதே என் அவதார நோக்கம். மற்றவர்களுடைய துயரங்களையும், வறுமையையும் நீக்கி அபலைகளை காப்பாற்றுவதே என் அன்பு. நல்லவர்களையும், தீயவர்களையும் மனதால் சமமாக கருதி அவர்களைக் காப்பாற்றுவதே பக்தி,'' என்று.
    சிறு வயது முதலே, பாபா மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தார். பண்டிகை நாட்களில் வாங்கி வரும் புத்தாடைகளை எடுத்துக் கொள்வதற்கு முன், தன் சகோதர, சகோதரிகளின் திருப்தியையே அவர் முதலிடமாகக் கொண்டார். நண்பர்கள் கேட்கும் பொருட்களை தன் பையில் இருந்து, அமானுஷ்ய சக்தியால் எடுத்துக் கொடுக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்.
    தன் சிறு வயதிலேயே தன் வீட்டிற்கு தொலை தூரத்திலிருந்து நீர் சுமந்து வருவார். அக்கம் பக்கத்தார் தங்களுக்கும் குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் அவர்களுக்கும் சுமந்து கொண்டு வந்து தருவார். சிறுவயதில் மேற்கொண்ட இப்பணி இன்னும் தொடர்கிறது. ஆந்திராவின் சில பகுதிகளில் நீரில் புளோரின் அதிகமாக இருப்பதால் முடக்குவாதத்தால் பலர் அவதிப்படுகிறார்கள். இவர்களின் துயர் துடைக்க, சுத்தமான நீர் கிடைக்க ஸ்ரீ சத்யசாயி குடிநீர் திட்டம் மூலம் வழி செய்துள்ளார். சுமார் ஆயிரம் கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள் ளன. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கும் கிருஷ்ணா நதி நீர் கண்டலேறு கால்வாயின் மூலம், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடையும் வண்ணம், அக்கால்வாயினை சீர்படுத்தி, விரயமின்றி நீர்வரத்து பெற இந்த திட்டம் தமிழகத்திற்கு உதவியுள்ளது.
    ஸ்ரீசத்யசாயி கல்வி நிறுவனங்களில் புகுமுகக் கல்வி முதல் முதுகலைக் கல்வி வரை அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கும் வசதி மற்றும் உணவிற்காக மட்டும் ஒரு சிறு தொகை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நோயாளிகளின் நோய் தீர்க்க புட்டபர்த்தி மற்றும் பெங்களூருவிலுள்ள ஸ்ரீ சத்யசாயி உயர் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும், அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
    தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் ஆசையை நீக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதையே தான் பாபாவும் வலியுறுத்துகிறார். ஒரு விதத்தில் ஆசை இல்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது என்பது இயலாததாகிவிடும். எனவே ஆசை வேண்டும் ஆனால் அதற்கு ஒரு வரையறை இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
    ""சுவாமி ஆசைக்கு ஒரு வரையறை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் பகவானை தரிசிக்க வேண்டும், பகவானுடன் பேச வேண்டும் என்று ஆன்மிக ஆசைகள் எழுவது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?' என்று ஒரு பக்தர் பாபாவிடம் கேட்டார். அதற்கு அவர், "நீ உன்னிடம் இல்லாத ஒன்றை அடைய விழைவதுதான் ஆசை எனப்படும். ஆனால், ஆன்மிகம் என்பது உன்னுடனேயே பிறந்தது. எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளின் ஒரு துளிதான் நீ உன்னுள் இருக்கும் இறைவன் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறார். எனவே நீ பகவானிடம் பேச வேண்டும், பகவானை காணவேண்டும் என்று எண்ணுவதெல்லாம் ஆசையாகிவிட முடியாது,'' என்று அதிஅற்புதமாக பதிலளித்தார்.
    ""என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை, போதுமான செல்வம் இல்லை என்றுகூறுபவன் ஏழையிலும் ஏழையாவான். போதுமென்ற மனம் கொண்டு வாழ்க்கையில் திருப்தி கொள்பவனே செல்வந்தன் ஆவான்,'' என்கிறார் சுவாமி.
    ஒரு முறை வேற்று நாட்டின் மீது படையெடுத்து சென்ற அரசர் ஒரு துறவியை கண்டார். அவரது ஏழ்மையை கண்டு ஒரு நல்ல ஆடையை பரிசளித்தார். துறவி அதை ஏற்க மறுத்துவிட்டார். ""மன்னா! நீ உனக்கு இருக்கும் நாடுபோதாதென்று வேற்று நாட்டை அபகரிக்க செல்கிறாய். நான் உடுத்தியிருக்கும் கந்தல் துணியே எனக்கு போதும் என்று திருப்தியுடன் இருக்கிறேன். எனவே நான் செல்வந்தன். நீ தான் ஏழை,'' என்றார். இதை கேட்ட மன்னன் மனம் திருந்தி திரும்பிச் சென்றான். எனவே இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும்.
    ""திருதராஷ்டிரன் தன் பிள்ளைகளின் மேல்கொண்ட பற்றின் காரணமாகவே அவர்களின் குற்றங்களைப் பொருட்படுத்தவில்லை. தசரதன் கைகேயயின் மீது வைத்த பற்றின் காரணமாகவே, ராமன் காடு செல்ல நேர்ந்தது. குழந்தைகளின் மீதுள்ள பாசத்தின் காரணமாக பெற்றவர்கள் அவர்களின் தவறுகளைக் கண்டிக்க மறந்துவிடுகிறார்கள். இதைப்போன்ற பற்றுகளும், ஆசைகளும் நம்முடைய புலன்களை அடக்கி ஆட்கொண்டால் ஆசைகளை யாரால் சரி செய்ய முடியும்? நாமே தான் ஆசைகளை அடக்கியாள வேண்டும்,'' என்று பகவான் பாபா கூறியுள்ளார்.
    நாமும் அவரது உபதேசத்தின்படி ஆசைகளுக்கு வரையறை அல்லது எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும்.
    -தொடரும்
    abirami
    abirami

    Posts : 4514
    மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum