Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உன் வாழ்க்கை உன் கையில்

Go down

உன் வாழ்க்கை உன் கையில் Empty உன் வாழ்க்கை உன் கையில்

Post by abirami Mon Apr 06, 2015 5:03 pm



- சத்குரு ஜக்கி வாசுதேவ்
பொதுவாகவே நிர்வாகம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் உங்களில் பலர், வணிக நிர்வாகத்தையும், தொழில் நிர்வாகத்தையுமே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அடிப்படையில், வாழ்க்கையே நிர்வாகம் தான். உள்நிலையிலோ, புறநிலையிலோ நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணினால் அது உங்களை நீங்களே எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். உங்கள் உடல், மனம், உணர்வுகள், சூழ்நிலைகள், சமூகம், தேசம், உலகம், வாழ்க்கையின் தரம்... எல்லாமே நீங்கள் உங்களை எவ்வளவு திறம்பட நிர்வகிக்கிறீர்களோ என்பதைப் பொறுத்தே உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகில் அனைத்துமேபொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது. வாழ்வின் மற்ற அம்சங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் போது, மகிழ்ச்சி பலவழிகளில் தொலைந்து விடக்கூடும்.
உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் மேல்நிலை நிர்வாகிகளுக்கு யோகவகுப்புகள் எடுக்கிறபோது ஒன்றை கவனித்திருக்கிறேன். வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வியின் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களும் பாதிப்பை அடைகிறார்கள். தோல்வியின் பாதிப்பை அனுபவிப்பது புரிந்து கொள்ளக் கூடியது. ஏனென்றால், தோல்வி எளிதில் வரும். ஆனால், வெற்றி பெற்றவர்களும் பாதிக்கப் படுவது துயரம் தருகிற விஷயம். ஏனெனில், வெற்றி அவ்வளவு எளிதில் வருவதில்லை. நீங்கள் வாழ்வில் எதை அடைய விரும்பினீர்களோ, அந்த வெற்றியை அடைந்த பிறகு, அதனால் பாதிப்பிற்கு ஆளாகிறீர்களென்றால் அதுதான் வாழ்வின் உண்மையான துயரம்.
இன்று உலகில் பெரும்பாலானோர் தங்கள் வெற்றிகளால், பாதிப்பிற்குத்தான் ஆளாகி இருக்கிறார்கள்.
ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, மனிதர்களுக்கு இருந்த மகிழ்ச்சி, வயது கூடக்கூட குறைந்து கொண்டே வருகிறது. காலப்போக்கில், மகிழ்ச்சியாய் இருக்கிற நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், அது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று நம்பிச் செய்கிறீர்கள். ஆனால், அவை மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை. அப்படியானால், உங்களை நீங்கள் நிர்வகிக்கிற முறை சரியில்லை என்று தான் பொருள். நீங்கள் பெறுகிற கல்வி, செய்கிற வேலை, உருவாக்குகிற குடும்பம், தேடுகிற லட்சியம் இவை எல்லாமே மகிழ்ச்சிக்காகத் தான். இத்தனைக்கும் பிறகு, மகிழ்ச்சி குறைகிறதென்றால் உங்களை நீங்களே மோசமாக நிர்வகிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
இன்று எங்கே போனாலும், மனஅழுத்தத்தை நிர்வகித்தல் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். தொழிலையும், குடும்பத்தையும், சொத்தையும் நிர்வகிக்கலாம். ஆனால், மனஅழுத்தத்தை ஏன் நிர்வகிக்க வேண்டும் என்று யோசித்தேன். வாழ்வதற்கு வேறு வழியே இல்லை என்று மக்கள் நினைத்து விட்டார்கள் என்று பிறகு தான் தெரிந்தது.
நீங்கள் செய்கிற செயலால் அழுத்தம் ஏற்படுகிறது. உங்களை நீங்களே மோசமாக நிர்வகிப்பதால் தான் அழுத்தம் வருகிறது. தனது இயங்குமுறைகளை நிர்வகிக்க தெரியாத ஒருவனுக்கே அழுத்தம் ஏற்படுகிறது. இன்று கடைநிலை ஊழியருக்கும், முதல் நிலை நிர்வாகிக்கும் கூட தங்கள் பணிகள் மனஅழுத்தம் தரக்கூடியது என்று கருதுகிறார்கள். உண்மையில், அது பணியில் இல்லை. உங்கள் செயல் பாடுகளை நீங்களே கையாள முடியாத போது, மனஅழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்.
வாழ்வை ஒரு விபத்து போல நிகழ்த்தாமல், அதனை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறீர்களோ, அங்கே செலுத்துவீர்களென்றால் அதற்குத்தான் நிர்வாகம் என்று பெயர். நான்கு பேருக்கு சமையல் நடக்கும் ஒரு சமையல் அறையை நிர்வகிப்பதென்றாலும், பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு தொழிற்சாலை என்றாலும் அதற்குரிய சூழலை உங்களுக்கு நன்கு நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள பொருட்களையும், மனிதர்களையும்கையாள தெரிந்திருக்க வேண்டும்.
பத்து பேரையோ அல்லது பத்தாயிரம் பேரையோ நிர்வகிக்கிறீர்களென்றால், பத்து அல்லது பத்தாயிரம் மனங்களை நிர்வகிக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் மனதையே உங்களால் நிர்வகிக்க முடியாத போது, பத்தாயிரம் மனங்களை நீங்கள் கையாண்டால், அது பேரழிவாகத்தான் முடியும். இத்தகைய நிர்வாகத்தால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், நாம் செய்கிற எல்லாமே மனிதகுலத்தின் நலம் கருதித்தான்.
ஒரு கானகத்தில் தற்பெருமை பிடித்த சிங்கம் இருந்தது. அது, ஒரு முயலைப் பிடித்து,"" இந்த காட்டுக்கு யார் ராஜா?'' என்று கேட்டது. பயந்து நடுங்கிய முயல், ""நீங்கள் தான்! நீங்கள் தான்! நிச்சயமாய் நீங்கள் தான்!'' என்றது. இதுபோல ஒரு நரி, மற்றும் சில விலங்குகளைப் பிடித்து இதே கேள்வியைக் கேட்டது.
எல்லா விலங்குகளும் பயத்தில், ""நீங்கள் தான் ராஜா'' என்று கூறின. இதனால் முழுகானகமே தன் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாய் நடைபயின்றது சிங்கம். சற்று தூரத்தில், ஒரு யானை வந்தது. அதனிடமும், ""இந்த காட்டுக்கு யார் ராஜா?'' என்று சிங்கம் கேட்டது. யானை தன் துதிக்கையால் சிங்கத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி வீசி எறிந்தது. தட்டுத் தடுமாறி எழுந்த சிங்கம், ""கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கலாமே'' என்றது. அதற்கு யானை, ""நான் தெளிவாகச் சொல்ல வேண்டுமில்லையா! அதற்காகத்தான்!'' என்றது. எனவே, பலத்தைக் காட்டுவதற்குத் தான் நிர்வாகம் என்று பலரும் எண்ணுகிறார்கள். அதை எந்த முட்டாளும் செய்யலாம். ஒரு சூழ்நிலையை நீங்கள் நிர்வகிக்கிற போது, அங்கே செயல்கள் நடந்தால் மட்டும் போதாது. அங்கிருப்பவர்கள் தங்கள் நிலை உயர்ந்திருப்பதாக கருத வேண்டும். ஓரிடத்தைநிர்வகிக்கிறீர்களென்றால், நீங்கள் அற்புதமான மனிதராகத் திகழ வேண்டும். அது நிகழவில்லையென்றால், நீங்கள் ஒரு நல்ல நிர்வாகி இல்லை.
- முற்றும்
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum